மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 28 ஜன 2018

மின்னம்பலம் வாசகருக்கு ஸ்மார்ட்போன் பரிசு!

மின்னம்பலம் வாசகருக்கு ஸ்மார்ட்போன் பரிசு!

சென்னைப் புத்தகக் காட்சி ஜனவரி 22ஆம் தேதியோடு நிறைவடைந்த நிலையில், அடுத்ததாக திருப்பூரில் ஜனவரி 25ஆம் தேதி முதல் பிப்ரவரி 4ஆம் தேதி வரை புத்தகக் காட்சி நடைபெறுகிறது.

திருப்பூர் பின்னல் புத்தக அறக்கட்டளை மற்றும் பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்தும் 15ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழா பத்மினி கார்டனில் ஜனவரி 25ஆம் தேதி தொடங்கியது. மொத்தம் 145 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 55 முன்னணி பதிப்பகங்கள் மற்றும் புத்தக விற்பனையாளர்கள் உள்பட மொத்தம் 90க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்துகொள்கின்றன.

இதில் அரங்கு எண் 130இல் தமிழின் முதல் மொபைல் பத்திரிகையான மின்னம்பலம் பதிப்பகம் இடம்பிடித்திருக்கிறது. தினமும் காலை 11 மணி முதல் இரவு 9.30 மணி வரை நடைபெறும் புத்தகக் காட்சியில் வாசகர்களும் நம் அரங்குக்கு வந்து நம் பத்திரிகை சம்பந்தமாகவும் பதிப்பகம் சார்ந்தும் கேள்வி கேட்டு தெரிந்துகொண்டு செல்வதோடு புத்தகங்களையும் வாங்கிச் செல்கின்றனர்.

சென்னைப் புத்தகக் காட்சியில் வாசகர்களை ஊக்குவிக்கும்விதமாக நடத்தப்பட்ட ஸ்மார்ட்போன் பரிசுத் திட்டம் திருப்பூர் புத்தகக் காட்சியிலும் தொடர்கிறது. அந்த வகையில் நேற்று (ஜனவரி 27) நடைபெற்ற குலுக்கலில் தங்கராஜ் MI 5A மாடல் ஸ்மார்ட்போனைத் தட்டிச்சென்றார். இவர் திருப்பூர், KNP சுப்ரமணி நகரைச் சேர்ந்தவர். இந்தப் பரிசை NEWS 18 தொலைக்காட்சியின் தலைமை செய்தி ஆசிரியர் குணசேகரன் வழங்கிச் சிறப்பித்தார்.

இந்தப் பரிசை பெற்றுக்கொண்ட தங்கராஜ் நம் பத்திரிகை சார்ந்தும், பதிப்பகப் புத்தகங்கள் சார்ந்தும் தனது கருத்தை முன்மொழிந்தார். பத்திரிகை குறித்து அவர் கூறுகையில், “முன்பு தொடர்ச்சியாக மின்னம்பலத்தில் செய்திகளைப் படித்து வந்தேன். ஆனால், தற்போது பணிச்சுமை அதிகரித்ததால் தொடர்ந்து படிக்க முடியவில்லை. இருப்பினும் அவ்வப்போது படித்துக்கொண்டு வருகிறேன்” என்றார்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

ஞாயிறு 28 ஜன 2018