மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 28 ஜன 2018

பொற்கோவிலில் நயன்தாரா

பொற்கோவிலில் நயன்தாரா

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலில் நயன்தாரா சிறப்பு வழிபாடு மேற்கொண்டுள்ளார்.

நயன்தாரா பிரதான கதாபாத்திரத்தில் நடித்த அறம் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதில் நடித்த நயன்தாராவுக்கு ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகள் குவிந்ததோடு சிறந்த நடிகைக்கான பல விருதுகள் அவருக்குக் கிடைக்கப்பெற்றன. இந்தியா மட்டுமல்லாது உலக அளவிலும் இந்தப் படத்திற்கு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.

இந்தப் படத்தை அடுத்து சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்த வேலைக்காரன் திரைப்படமும் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்தப் படங்களை தாண்டி அவர் பெரிதும் எதிர்பார்த்தது அவரது காதலனும் இயக்குநருமான விக்னேஷ் சிவனின் தானா சேர்ந்த கூட்டம் படத்தைத் தான். அந்தப் படம் ரசிகர்களிடம் எத்தகைய வரவேற்பைப் பெற போகிறதோ என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். அந்தப் படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் பாஸிட்டிவ் ரிசல்ட்டே கிடைத்திருக்கிறது.

இந்நிலையில் இந்தப் படங்களின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பஞ்சாப், அமிர்தசரஸ் பொற்கோவிலில் சிறப்பு வழிபாடு மேற்கொண்டுள்ளார். அங்கு எடுத்த புகைப்படங்களையும் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

ஞாயிறு 28 ஜன 2018