மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 28 ஜன 2018

அசாமில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு!

அசாமில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு!

அசாம் மாநிலம் கவுகாத்தியில் பிப்ரவரி 3 மற்றும் 4ஆம் தேதி சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறவுள்ளது.

இந்தச் சர்வதேச மாநாட்டில் அமெரிக்கா, செக் குடியரசு, ஜெர்மனி, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் மற்றும் ஜப்பான் போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்த 20 நாடுகளின் தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். இந்தியாவிலிருந்து ரத்தன் டாடா, முகேஷ் அம்பானி, திலிப் சங்வி மற்றும் மருத்துவர் நரேஷ் ட்ரெஹன் உள்ளிட்டவர்களும், உலகம் முழுவதும் உள்ள 4,800 பிரதிநிதிகளும் பங்கேற்கின்றனர். அட்வாண்டேஜ் ஆஃப் அசாம் என்ற பெயரில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள இந்த நிகழ்விற்கு ரூ.32 கோடி செலவிடத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த மாநாடு குறித்து அசாம் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் சந்திர மோகன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “வலுவான நெட்வொர்க் இணைப்புடன் கூடிய மூலோபய புவியியல் இடம் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் சங்கத்திற்கிடையில் வணிக வாய்ப்புகளைச் சிறப்பாக்குதல் இந்த மாநாட்டின் முக்கிய நோக்கமாகும். இந்த மாநாட்டையொட்டி 14 சர்வதேச மற்றும் உள்நாட்டு சாலைக் காட்சிகள் முன்னதாக நடத்தப்படுகிறது. அசாம் மாநில முதல்வர் இந்த மாநாட்டிற்குத் தலைமையேற்கிறார். 200க்கும் அதிகமான தனிநபர் சந்திப்புகளும் இதையொட்டி நடைபெறுகின்றன. முகேஷ் அம்பானி மற்றும் ஆகியோருடன் தபூர் ஆனந்த், ஹர்ஸ்வர்தனன், அம்புஜா நியோடியா சிமெண்ட்ஸ் உள்ளிட்டவர்களும் இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளனர்” என்றார்.

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

3 நிமிட வாசிப்பு

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

3 நிமிட வாசிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

ஞாயிறு 28 ஜன 2018