மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 28 ஜன 2018

ஏமாற்றம் அளித்த போபன்னா

ஏமாற்றம் அளித்த போபன்னா

ஆஸ்திரேலியா ஒப்பன் தொடரின் இறுதிப் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் டைம் பேபாஸ் மற்றும் இந்திய டென்னிஸ் வீரர் ரோஹன் போபன்னா ஜோடி தோல்வியைத் தழுவியது.

மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய ஒப்பன் தொடரின் கலப்பு இரட்டையர் பிரிவிற்கான இறுதிப் போட்டி இன்று (ஜனவரி 28) நடைபெற்றது. அதில் இந்திய வீரர் ரோஹன் போபன்னா மற்றும் ஹங்கேரி நாட்டு வீராங்கனை டைம் பேபாஸ் ஜோடி, கேப்ரியலா டாப்ரோஸ்கி,மேட் பவிச் ஜோடியை எதிர்கொண்டது.

இதுவரை போபன்னா ஆஸ்திரேலிய ஒப்பன் தொடரின் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது கிடையாது என்பதால் இந்த போட்டியில் வெற்றிபெற்றுவிடுவார் என ரசிகர்கள் பெரும்பாலும் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். அதற்கு ஏற்றார் போல் முதல் செட்டில் டைம் பேபாஸ், போபன்னா ஜோடி 6-2 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று நம்பிக்கை அளித்தது. ஆனால் இரண்டாவது செட்டில் அதிரடியாக விளையாடிய கேப்ரியலா டாப்ரோஸ்கி,மேட் பவிச் இருவரும் சிறப்பாக விளையாடி 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று போட்டியை சமன் செய்தனர். எனவே வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி செட் மிகவும் சுவாரஸ்யமாக நடைபெற்றது. அதில் இரண்டு அணி வீரர்களும் விட்டுக்கொடுக்காமல் விளையாடினர். நீண்ட நேரம் நடைபெற்ற இந்த மோதலில் 11-9 என்ற புள்ளிக் கணக்கில் கேப்ரியலா டாப்ரோஸ்கி,மேட் பவிச் ஜோடி, டைம் பேபாஸ், போபன்னா ஜோடியை வீழ்த்தி ஆஸ்திரேலிய ஒப்பன் பட்டத்தை தட்டிச் சென்றது.

இந்தமுறை போபன்னாவிற்கு எதிரணியில் விளையாடிய கேப்ரியலா டாப்ரோஸ்கி இதற்கு முன்னர் பிரெஞ்சு ஒப்பன் தொடரில் கலப்பு இரட்டையர் பிரிவில் போபன்னாவுக்கு ஜோடியாக விளையாடினார். மேலும் அந்த ஜோடி கோப்பையையும் கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

ஞாயிறு 28 ஜன 2018