கட்சி விலையே ஒரு ரூவா தான? -அப்டேட் குமாரு


என்னண்ணே ஒரு ரூவா குடுத்தா முகத்தைக்கூட பாக்கமாட்டாங்கன்னு அதிமுககாரர் சொல்லிருக்காரேன்னு ஒரு கேள்வி தானப்பா கேட்டேன். ‘அவங்க முதலமைச்சரே ஒரு ரூவா சம்பளம் வாங்கினவங்க தான. அவங்க கால்ல தான இவங்க விழுந்து கிடந்தாங்கன்னு ஒரே வார்த்தைல மொத்தமா காலி பண்ணிட்டாப்ல டீ கடை அண்ணன். எதுக்கும் இவங்ககிட்ட உசாராத்தான் இருக்கணும். அப்டேட்டைப் பாருங்க. நான் போய் அவர் வர்ற வழில ஒரு ரூவாயை போட்டுட்டு வர்றேன். எடுக்குறாரா இல்லையான்னு பாப்போம்.
Gokul Narayan
தேனாம்பேட்டை சிக்னலில் விட்டால் , வழி தெரியாதவர் பழனிசாமி-ஜெ.அன்பழகன், திமுக
Rolling on the bed
குமார் குமார்
ஒரு ரூபாய் கொடுத்தா பிச்சைக்காரன் கூட வாங்க மாட்டான்னு சொன்ன செல்லூர் விஞ்ஞானிய யாராவது பாத்தீங்களா?
Karur Kittu
சிங்கத்த தூக்கிட்டு காளையை டீம் லோகோவா வைக்கலாமே.
பேருக்கு ஒரு காரணமாச்சும் இருக்கும்.
கா. விஜய் ஆனந்த்
தயிர் சாதத்தின் மேல்
ஆப்பாயில் வைத்தது போல் இருக்கிறது
உன் கன்னத்தின் மேல் உள்ள மச்சம்...
Jayanth Nedunchezhian
என்னை நடிகனாக பாக்காதிர்கள் - உதயநிதி
சத்தியமா பாக்கல.
Thalapathy Bharani
சோடா பாட்டில் வீசுவோம் என்ற பேச்சு தொடர்பாக ஆண்டாளிடம் மன்னிப்பு கோரினேன் - சடகோப ராமானுஜ ஜீயர்
ஆமா இவரு சோடா பாட்டில் கிட்ட தான் மன்னிப்பு கேட்டு இருக்கனும் எதுக்கு ஆண்டாள் கிட்ட கேக்குறாரு
Bala Salem
யூ ட்யூப பார்த்து எதோ புதுவகை பிரியாணி செய்ய ஆரம்பிச்சிட்டாங்க..! 😢 ஆட்டுக்கறி வேஸ்டாயிருமோன்னு மனசு பதறுது..
அசோகன்
""பாஜக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் உடனடியாக வளர்ச்சி ஏற்படும்" - தமிழிசை
ஏன் வீட்டுக்கு வீடு யூரியா தெளிக்க போரிங்களா?
ம ன் ன ன்
நடை பாதை வியாபாரியிடம் நாம் வாங்க வேண்டியது தன்னம்பிக்கையும் தான்
சாய் ப்ரஷாந்த்
நீ எப்படி இருக்கிறாயோ
அப்படியே தான் உனக்கு
வாழ்க்கை துணையும் அமையும்.
@ajay_aswa
குழந்தைகளிடம் உள்ளதை வாங்க வேண்டுமானால் மற்றொன்றை அவர்களிடம் கொடுத்தால் மட்டுமே சாத்தியம்
முட்டைகாரன்
மீடியாவுக்கு பிரபலமானவர்களின் விறுவிறுப்பான நியூஸ் ஏதும் கிடைக்கலனா தான் ஊருக்குள்ள நடக்குற திருட்டு , கற்பழிப்பு , கொலை லாம் கண்ணுக்கு தெரியுது...
P C சுபா
பல குழந்தைகளின்
பிறந்த நாள் எல்லாம்
குப்பைத் தொட்டிக்கே
தெரியும்.
@amuduarattai
வயது அதிகரிக்க அதிகரிக்க, கூடவே ,நாம் உணக்கூடாத, உணவு பொருட்களின் பட்டியலும் அதிகரிக்கிறது.
காக்கைச் சித்தர்
ஆண்களுடன் பெண்களும் தோளோடு தோள் சேர்ந்து சமூகத்தை வழிநடத்த வேண்டும்: பிரதமர் மோடி
அப்பிடி நடந்தா உங்க ஆளுங்க தானே வெட்டுறது முதல்ல?
@taraoffcl
இனி ஒரு விதி செய்வோம் அப்படினு பாடுனா ....
பக்கத்துல இருக்கவன் ஆட்சி மசாலா வாங்குவோம் நு பாடுறான்...
எடு செருப்ப நாயே