மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 28 ஜன 2018

43051 மையங்களில் போலியோ சொட்டு மருந்து!

43051 மையங்களில் போலியோ சொட்டு மருந்து!

தமிழகம் முழுவதும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து முகாம் 43 ஆயிரத்து 51 மையங்களில் நடைபெற்றது.

இதில் 5 வயதுக்கு உட்பட்ட 71 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இதற்காக அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் உள்ளிட்ட இடங்களில் 43 ஆயிரத்து 51 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது.

சுகாதாரத் துறை பணியாளர்கள், கிராமப்புற செவிலியர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், தன்னார்வலர்கள் என 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர், இந்தப் பணியில் ஈடுபட்டார்கள். மேலும் ரயில், பேருந்து, விமான நிலையங்கள் மற்றும் சுங்கச்சாவடி ஆகிய இடங்களில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருத்து அளிப்பதற்காக 1,652 நடமாடும் குழுக்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சென்னையில் போலியோ சொட்டு மருந்து முகாமை இன்று(ஜனவரி 28) முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்தை வழங்கித் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

ஞாயிறு 28 ஜன 2018