ஸ்டாலின் பெயருக்கு ஸ்டாலினே தந்த விளக்கம்!

ஸ்டாலின் என்பது தமிழ்ப் பெயரல்ல, அது ஒரு காரணப் பெயர் என்று தனக்கு பெயர் வைக்கப்பட்ட சூழலை திமுக செயல்தலைவர் ஸ்டாலின் விளக்கிப் பேசினார்.
திமுக தலைமைப் பொதுக்குழு உறுப்பினரும், தொழிற்சங்கத் தலைவருமாகிய ராஜகாந்தம், ரத்தினப்பிரியா தம்பதியினரின் மகள் பிரீத்திக்கும், திமுகவைச் சேர்ந்த இலுப்பக்கோரை முன்னாள் உராட்சி மன்றத் தலைவர் குரு.அன்பரசன், ஜெயப்பிரியா தம்பதியின் மகன் அபராஜிதனுக்கும் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் இன்று (ஜனவரி 28) திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தலைமையில் திருமணம் நடைபெற்றது.
திருமணத்தை நடத்தி வைத்துப் பேசிய திமுக செயல்தலைவர் ஸ்டாலின், "இங்கு மணமக்கள் பெயர் அபராஜிதன்-பிரீத்தி என்று வடமொழியில் இருந்தது. உங்களுடைய பெயர் எப்படி இருந்தாலும் பிறக்கப்போகும் குழந்தைகளுக்காவது நல்ல தமிழ்ப் பெயர்களை சூட்ட வேண்டும் என்று இங்கு நான் கேட்டுக் கொள்கிறேன். ராஜகாந்தம் குடும்பத்தின் மீதுள்ள உரிமையில் இதைக் கூறுகிறேன்.
அழகான தமிழ் பெயர் சூட்டச் சொல்கிறீர்களே உங்கள் பெயர் என்ன தமிழ்ப் பெயரா என்று உங்களுக்கு சந்தேகம் வரலாம். ஸ்டாலின் என்பது தமிழ்ப் பெயர் இல்லை. அது ஒரு காரணப் பெயர். நான் பிறந்தபோது எனக்கு ஐயாதுரை என்று பெயர் சூட்ட தலைவர் கலைஞர் முடிவு செய்திருந்தார். ஐயா என்பது பெரியாரைக் குறிக்கக் கூடியது. துரை என்பது அண்ணாவின் பெயர் பின்பகுதியான துரை. இதை இரண்டையும் சேர்த்து பெயர் சூட்ட முடிவு செய்திருந்தார்.
ரஷ்ய அதிபர் ஸ்டாலின் மறைந்த நேரம் அவருக்கான இரங்கல் கூட்டம் சென்னை கடற்கரையில் நடந்துகொண்டிருக்கிறது. அங்கு கலைஞர் பேசிக்கொண்டிருக்கும் போது, ஒரு துண்டு சீட்டில் உங்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது என்று எழுதி அவரிடம் காட்டுகிறார்கள். உடனே அந்த மேடையிலேயே ஸ்டாலின் நினைவாக அவருடைய பெயரையே என் குழந்தைக்குச் சூட்டிகிறேன் என்று அறிவித்தார். இதுதான் வரலாறு" என்று பேசினார்.
ஸ்டாலின் பெயருக்கு ஸ்டாலினே தந்த விளக்கம்!
ஸ்டாலின் என்பது தமிழ்ப் பெயரல்ல, அது ஒரு காரணப் பெயர் என்று தனக்கு பெயர் வைக்கப்பட்ட சூழலை திமுக செயல்தலைவர் ஸ்டாலின் விளக்கிப் பேசினார்.
திமுக தலைமைப் பொதுக்குழு உறுப்பினரும், தொழிற்சங்கத் தலைவருமாகிய ராஜகாந்தம், ரத்தினப்பிரியா தம்பதியினரின் மகள் பிரீத்திக்கும், திமுகவைச் சேர்ந்த இலுப்பக்கோரை முன்னாள் உராட்சி
மன்றத் தலைவர் குரு.அன்பரசன், ஜெயப்பிரியா தம்பதியின் மகன் அபராஜிதனுக்கும் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் இன்று (ஜனவரி 28) திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தலைமையில் திருமணம் நடைபெற்றது.