மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 28 ஜன 2018

வியூகம் அமைத்த அணிகள்!

வியூகம் அமைத்த அணிகள்!

ஐ.பி.எல் தொடரின் 11ஆவது சீசன் ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளது. அதற்கான வீரர்கள் தேர்வு பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. அதில் சில அணிகள் முதலில் சொதப்பியதைப் போல் தெரிந்தாலும் பின்னர் அவர்களின் வியூகம் தெளிவானது.

அதன்படி முதலில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் குறித்து முதலில் காண்போம். சென்னை அணி நேற்று (ஜனவரி 27) நடைபெற்ற ஏலத்தில் சிறந்த ஆல்ரவுண்டர்கள், சுழற்பந்து வீச்சாளர்கள், முன்னணி பேட்ஸ்மேன்கள் என அனைவரையும் தேர்வு செய்திருந்தது. இருப்பினும் தொடக்க வீரர் மற்றும் வேகப்பந்து வீச்சாளர்கள் ஆகியோரின் மீது கவனம் செலுத்த தவறியது. சென்னை அணியில் இதற்கு முன்னர் விளையாடிய முரளி விஜய், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா என பல வாய்ப்புகள் கிடைத்த பொழுதும் சென்னை அணி அமைதி காத்தது. ஏனெனில் சென்னை அணியிடம் குறைந்த அளவே (ரூ.17 கோடி )ஏலத்தொகை மீதமிருந்தது. அதற்குள் 5 வீரர்களைப் பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தது. ஆனால் இன்று உணவு இடைவேளைக்குள் பெரும்பாலான அணிகள் அனைத்து வீரர்களையும் ஏலம் பெற்றதால் அனைத்து அணிகளிடமும் ஏலத்தொகை ரூ.5 கோடிக்கும் குறைவாக இருந்தது.

அப்போது சென்னை அணியிடம் ரூ.11 கோடி மீதமிருந்தால், முக்கியமான முதல் சுற்றில் ஏலம் எடுக்கப்படாத வீரர்களையும், இளம் வீரர்ககளையும் போட்டியின்றி தேர்வு செய்தது. அதனால் சென்னை வீரர் முரளி விஜய் (ரூ.2 கோடி), தென்னாப்பிரிக்க அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் (ரூ.0.5 கோடி), இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் சாம் பில்லிங்ஸ் (ரூ.1 கோடி), இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் (ரூ.1.5 கோடி) ஆகிய வீரர்களை எளிதில் தேர்வு செய்து எளிதில் தேவையை பூர்த்தி செய்தது.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

ஞாயிறு 28 ஜன 2018