மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 28 ஜன 2018

சென்னையில் கள்ள நோட்டுகள் பறிமுதல்!

சென்னையில்  கள்ள நோட்டுகள் பறிமுதல்!

திருச்சியில் கைதான கள்ளத்துப்பாக்கி கும்பலைச் சேர்ந்த நாகராஜ் அளித்த தகவலின் பேரில், சென்னையில் உள்ள அவரது உறவினர் வீட்டிலிருந்து 64 ஆயிரம் ரூபாய் அளவுக்கு கள்ளநோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த பணத்தை பதுக்கி வைத்ததாக அவரது தாயார் உட்பட 2 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருச்சியில் உள்ள விடுதியில் கள்ளத்துப்பாக்கிகளுடன் தங்கியிருந்த 3 பேரைத் தஞ்சை தனிப்படை காவல்துறையினர் கைது செய்து, 2 கள்ளத்துப்பாக்கிகள் மற்றும் 10 தோட்டாக்களையும் பறிமுதல் செய்தனர். கைதானவர்களில் பரமேஸ்வரன் என்பவர் சென்னை வியாசர்பாடி காவல்நிலையத்தில் பணியாற்றும் காவலர் ஆவார்.

மேலும், சென்னை அயனாவரம் நம்மாழ்வார்பேட்டையைச் சேர்ந்த நாகராஜ், தஞ்சை பட்டுக்கோட்டையைச் சேர்ந்த சிவா ஆகியோரும் கைதாகினர். நாகராஜ் அளித்த வாக்குமூலத்தின் மூலம் அவர்களுக்குக் கள்ள நோட்டு கும்பலுடன் தொடர்பு இருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து சென்னை அயனாவரத்தில் உள்ள நாகராஜின் தாயாரிடம் காவல்துறையினர் விசாரணை செய்து, வீட்டில் சோதனை நடத்தினார்கள். இந்தச் சோதனையின்போது, 54 ஆயிரம் ரூபாய்க்கான 500 ரூபாய் நோட்டுகள், 8 ஆயிரம் ரூபாய்க்கான 100 ரூபாய் நோட்டுகள் மற்றும் புதிய 2 ஆயிரம் நோட்டுக்கள் இரண்டு என 64 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

ஞாயிறு 28 ஜன 2018