மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 28 ஜன 2018

சண்டே ஸ்பெஷல்: புதுமையான மினியேச்சர் சிலைகள்!

சண்டே ஸ்பெஷல்: புதுமையான மினியேச்சர் சிலைகள்!

மணிக்கொடி

அன்புக்குரியவர்களுக்குப் பிறந்த நாள், திருமண நாள் என்றால், வழக்கமான பரிசுகளைப் பரிசளிப்பதை இன்று யாரும் விரும்புவதில்லை. புதுமையான பரிசுகளையே விரும்புகிறார்கள். அந்தச் சிறப்பான தருணங்களை மேலும் சிறப்பானதாக மாற்றும் புதுமையான பரிசுகள் இன்று பலவும் வந்துவிட்டன. அப்படிப்பட்ட புதுமையான பரிசுகளில் ஒன்றுதான் ‘மினியேச்சர்’ பொம்மைப் பரிசு.

அன்புக்குரியவர்களைப் பொம்மையாக மாற்றித் தரும் புதுமைப் பரிசு இது. இந்தப் புதுமையான பரிசுகளைத் தேடி அலைபவர்களுக்காக உதவுகிறது சென்னையைச் சேர்ந்த ‘மை க்யூட் மினி’ (My Cute Mini) நிறுவனம். பிரமாண்ட விஷயங்களைப் போலவே மினியேச்சர்களும் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துபவை. ‘புலி’யில் வரும் ‘ஜிங்குலியா ஜிங்குலியா சித்திரக்குள்ளி சிலிர்க்கிறாளே..’ பாடலில் வரும் குட்டி மனிதர்களைப் போல செம க்யூட்டாக இருக்கிறது ‘மை க்யூட் மினி’யில் காணப்படும் குட்டி சிலைகள். திருமண கொண்டாட்டங்கள், ட்ரக்கிங் மனிதர்கள், க்யூட் குழந்தைகள், சினிமா, அரசியல் பிரபலங்கள் என அத்தனை பேரையும் மினி சிலைகளாக வடிவமைக்கலாம்.

இந்தச் சிலைகள் எல்லாமே சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் வடிவமைக்கப்படுகின்றன. குழந்தைகள் பயன்படுத்தினால் கூட ஆபத்து நேராத மெட்டீரியல்களைக் கொண்டு உருவாக்குகிறார்கள். அழகோடு சேர்ந்து பாதுகாப்பும் கருத்தில் கொள்ளப்படுகிறது. கிஃப்ட் கொடுக்கச் சிறந்த பரிசாக இந்த மினியேச்சர்கள் இருப்பதால், காதலர்கள் இந்த மினியேச்சர் பொம்மைகளை விரும்பி வாங்குகிறார்கள். 2 ஆயிரத்தில் இருந்து 25 ஆயிரம் வரை இந்த மினியேச்சர்களின் விலைகள் இருந்தாலும் 16 செண்டி மீட்டரில் ஆரம்பித்து ஒரு அடி உயரம் வரை சிலைகள் இருக்குமாறு வடிவமைக்கிறார்கள்.

பெரும்பாலான சிலைகளை செராமிக், களிமண், பிளாஸ்டர் ஆஃப் பாரீஸ் போன்ற பொருட்களைக் கொண்டு செய்கிறோம். மெட்டீரியலின் தன்மைக்கேற்ப ஒரு நாளிலும் முடியலாம். மூன்று, நான்கு சிட்டிங்குகளும் ஆகலாம். அதாவது இரண்டு வாரத்தில் ரெடி பண்ணி கொடுத்திடலாம். செராமிக்ஸ் பொம்மைகள் பார்ப்பதற்கு அழகாகவும், நுணுக்கமானதாகவும் இருப்பதால் கூடுதல் உழைப்பு தேவையாக இருக்கும். சின்னதொரு புகைப்படம் கொடுத்தாலே போதும், அதில் இருப்பவரைத் தத்ரூபமாக டிசைன் செய்து விடுவது இந்த மினியேச்சர் செய்பவர்களின் ஸ்பெஷலாகவே உள்ளது.

இயந்திரமோ, அச்சோ கொண்டு எந்தச் சிலைகளையும் உருவாக்குவது பெரும்பாலும் தவிர்க்கப்படுகிறது. எல்லாமே ஹேண்ட்மேட்தான். ஒவ்வொருவர் முகத்துக்கும் அந்தச் சரியான முகவெட்டு வருகிற வரைக்கும் பர்ஃபெக்‌ஷன் பார்க்க வேண்டும். சின்ன மாற்றம் இருந்தால் கூட கஸ்டமர் அது என்னுடைய முகம் இல்லைன்னு சொல்லிவிட்டால் அதன் பிறகு அவர்களின் உழைப்பு வீணாகிப் போவதால் மிகவும் நுணுக்கமாக இந்த வேலையைச் செய்கிறார்கள். மேலும் இந்த தயாரிப்புகளுக்கு பத்து வருடங்கள் வரை உத்தரவாதமும் தரப்படுகிறது. ஒரு மாதத்திற்கு 200க்கும் மேற்பட்ட சிலைகளை வடிவமைக்கப் படுகின்றன. பண்டிகைக் காலங்களில் சிலைகளின் எண்ணிக்கை, நிச்சயம் 300-ஐ தாண்டிவிடுகிறது. தெளிவான போட்டோ ஒன்றைக் கொடுத்தால் போதும். அந்த போட்டோவில் இருப்பவரை அப்படியே மினியேச்சர் சிலையாக மாற்றிவிடுகிறார்கள் இந்த வல்லுநர்கள். இயந்திரங்கள் எதுவும் இன்றி கைகளினால் உருவாக்குவதால், ஒரு சிலை வடிவமைக்க 10 முதல் 20 நாட்களாகும்.

முதலில் முடி இல்லாத முகத்தை வடிவமைத்து வாடிக்கையாளர்களின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்து அதற்கு அவர்கள் ஓகே சொல்லிவிட்டால் தான் அடுத்தடுத்த பணிகளை ஆரம்பிக்கிறார்கள். முகம், உடம்பு, உடை என பலதரப்பட்ட பணிகளுக்குப் பிறகு மினியேச்சர் மனிதர்கள் உயிர் பெறுகிறார்கள். மேலும் சிலைகளை உருவாக்கி அதற்கு வண்ணம் பூசுவதைவிட, சிலைகளுக்குத் தேவையான வண்ணங்களைக் களிமண்ணில் கலந்து தயாரிப்பதே சிறந்தது. அத்தகைய சிலைகளில் தான் உயிரோட்டம் தவழ்ந்தோடும். வண்ணமயமான உடைகள், காலணிகள், தோல் நிறம் எனச் சிலையின் எல்லா நிறங்களையும் களிமண்ணிலேயே கலந்து விடுகிறார்கள். அதனால் வண்ணம் பூசும் வேலை சுலபமாகினாலும், உடை வடிவமைப்பு கடினமாகிவிடுகிறது. அதிலும் அதிக டிசைன்களுடைய உடைகள் என்றால் அத்தகைய சிலைகளை உருவாக்க அதிகமாக மெனக்கெட நேரிடுகிறது.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

ஞாயிறு 28 ஜன 2018