படம் புறக்கணிப்பு: பன்னீர் பதில்!


கோவையில் நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு விழா அழைப்பிதழில் தன்னுடைய படம் இல்லாதது குறித்து கவலைப்படவில்லை என்று துணை முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு விழாவுக்கான அழைப்பிதழில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் வேலுமணி ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்த நிலையில், துணை முதல்வர் பன்னீர்செல்வம் புகைப்படம் புறக்கணிக்கப்பட்டது. அமைச்சர் வேலுமணி முதல்வரின் தீவிர ஆதரவாளர் என்பதால் துணை முதல்வர் புகைப்படம் இடம்பெறவில்லை என்று பன்னீர் ஆதரவாளர்கள் குற்றம் சாட்டினர்.