மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 28 ஜன 2018

தமிழக அரசின் நாடகம்!

தமிழக அரசின் நாடகம்!

பேருந்துக் கட்டணத்தை குறைத்துவிட்டதுபோல் தமிழக அரசு நாடகமாடுவதாக தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார்.

பேருந்துக் கட்டணத்தை திரும்பப்பெற வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர். மாணவர்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தியதால், பல்வேறு இடங்களில் கல்லூரிகளுக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டது. திமுக சார்பில் நேற்று ஆர்பாட்டம் நடைபெற்ற நிலையில், இன்றுக்குள் பேருந்துக் கட்டணத்தை திரும்பப் பெறாவிட்டால் தமிழகம் முழுவதும் மறியல் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கபட்டுள்ளது. பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் வந்தததையடுத்து, பேருந்துக் கட்டணத்தை சற்றுக் குறைத்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.

இந்நிலையில் இதற்கு தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

"தமிழக அரசு பேருந்து கட்டணம் 20ஆம் தேதியிலிருந்து 55% முதல் 60% வரை உயர்த்தப்பட்டது. இன்று அதை 5% முதல் 10% வரை குறைத்து, தமிழக அரசு பேருந்து கட்டணத்தை குறைத்து விட்டதுபோல் நாடகம் ஆடுவதை வன்மையாக கண்டிக்கிறேன். எடுத்துக்காட்டாக ஒரு கிலோ மீட்டருக்கு (KM) 42 பைசாவாக இருந்த பேருந்து கட்டணத்தை 60 பைசாவாக உயர்த்திவிட்டு, 2 பைசா குறைத்து, கிலோ மீட்டருக்கு (KM) 58 பைசாவாக நிர்ணயிப்பது மக்களை ஏமாற்றும் செயல்" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பேருந்துக் கட்டணத்தை 60% உயர்த்தியிருப்பது வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது. ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தாமல், மக்களுக்கு இலவசத்தை கொடுத்து, அதில் ஊழல் செய்வதில் அக்கறை செலுத்துகிறதே தவிர, வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தாமல், இளைஞர்கள் வேலையில்லாமல் தவித்துகொண்டிருக்கும் இந்த நேரத்தில் பேருந்துகட்டணத்தை உயர்த்தி, குறைப்பது போல் நாடகமாடுவதை தவிர்த்துவிட்டு, உயர்த்தப்பட்ட கட்டணத்தை முழுவதுமாக ரத்துசெய்துவிட்டு, போக்குவரத்து துறையில் நடைபெறும் ஊழல்களையும், நிர்வாகச் சீர்கேட்டையும் சரிசெய்தாலே நஷ்டத்தை ஈடுசெய்ய முடியும்" என்று ஆலோசனை கூறியுள்ளார்.

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் ...

3 நிமிட வாசிப்பு

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் கவலை!

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

3 நிமிட வாசிப்பு

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

3 நிமிட வாசிப்பு

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

ஞாயிறு 28 ஜன 2018