மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 28 ஜன 2018

தானா சேர்ந்த கூட்டம்: கிளைமேக்ஸ் காட்சி!

தானா சேர்ந்த கூட்டம்: கிளைமேக்ஸ் காட்சி!

சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடித்து வெளியான தானா சேர்ந்த கூட்டம் படத்தின் நீக்கப்பட்ட கிளைமேக்ஸ் காட்சியின் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.

விக்னேஷ் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன், செந்தில், சத்யன், சுரேஷ் சந்திர மேனன் ஆகியோர் நடித்த தானா சேர்ந்த கூட்டம் படமானது பொங்கல் தினக் கொண்டாட்டமாக வெளியானது. இந்தப் படத்தில் சிபிஐ அதிகாரியாக ஆக வேண்டுமேன ஆசைப்படும் சூர்யாவுக்கு அந்த வேலையை அடைய முடியாதவாறு மேல் அதிகாரியான சுரேஷ் மேனன் சிக்கல்களைத் தருகிறார். இதனால் அந்த மேல் அதிகாரியின் பெயரை பயன்படுத்தி பல கொள்ளைகளைச் செய்கிறார் சூர்யா.

அந்தக் கொள்ளை கும்பலைத் தேடி பிடிக்க முற்படுகிறது சிபிஐ அதிகாரி உள்ளிட்ட காவல்துறையைச் சார்ந்த டீம். மற்றொரு புறம் அவர்களிடமிருந்து தப்பிக் கொண்டே இருக்கிறது சூர்யா டீம். படத்தின் இறுதியில் சூர்யா தன்னுடன் இருந்தவர்களை அனுப்பி வைத்திட்டு போலீசிடம் மாட்டிக் கொண்டாலும் சாதுரியமாக எஸ்கேப் ஆகி விடுவதாகப் படம் முடிகிறது.

இந்த கிளைமேக்ஸ் காட்சி படம் முழுமை அடையாத தன்மையையே கொண்டிருந்தது. சூர்யாவுடன் இருந்தவர்கள் என்ன ஆனார்கள் என்கிற கேள்வியும் விமர்சனங்களில் முன்வைக்கப்பட்டன. இந்த நிலையில் அந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக படத்தில் நீக்கப்பட்ட கிளைமேக்ஸ் காட்சியின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ க்ரீன்.

அந்த வீடியோவில் நகைக்கடையில் கொள்ளையடித்த நகைகளுடன் கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன், அவரது குடும்பம், செந்தில், சத்யன் உள்ளிட்ட பலரும் சிங்கப்பூர் செல்லும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. கப்பல் துறை அதிகாரிகளின் கேள்விகளுக்கு ரம்யா கிருஷ்ணன் அளிக்கும் பதில்கள் மற்றும் கப்பலுக்குள் சூர்யா, கீர்த்தி சுரேஷ் இருவரின் ரொமான்ஸ் காட்சிகள் என கலகலப்பாக இருக்கிறது அந்த வீடியோ. இந்த நீக்கப்பட்ட காட்சிகள் படத்தில் இடம்பெற்றிருந்தால் இன்னும் கூடுதல் கவனத்தைப் படம் பெற்றிருக்கும் என்கிற எண்ணமே உருவாகி இருக்கிறது.

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

3 நிமிட வாசிப்பு

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

3 நிமிட வாசிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

ஞாயிறு 28 ஜன 2018