மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 28 ஜன 2018

நாங்கள் கொடுக்கும் அரிவாளையும் பழகிக் கொள்ளுங்கள்: பாரதிராஜா

நாங்கள் கொடுக்கும் அரிவாளையும் பழகிக் கொள்ளுங்கள்: பாரதிராஜா

‘சோடா பாட்டில் வீசத்தெரிந்த ஜீயர், நாங்கள் கொடுக்கும் அரிவாளையும் பழகிக்கொண்டால் இன்னும் வசதியாக இருக்கும்’ என்று இயக்குநர் பாரதிராஜா கருத்து தெரிவித்து உள்ளார்.

கடந்த ஜனவரி 7ஆம் தேதி தினமணி சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் கவிஞர் வைரமுத்து ‘தமிழை ஆண்டாள்’ என்ற தலைப்பில் ஆண்டாள் குறித்து உரையாற்றினார். ஆண்டாள் குறித்து அவர் பேசியது பெரும் சர்ச்சைக்குள்ளானது. பல்வேறு இந்துத்துவ அமைப்பினர் வைரமுத்துவுக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கவிஞர் வைரமுத்துவுக்கு எதிராக திருச்செங்கோட்டில் ஜனவரி 26ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய ஸ்ரீவில்லிப்புத்தூர் சடகோப ராமானுஜ ஜீயர், “உலகத்தில் இனி யாராவது மேடை போட்டுக் கடவுளைப் பற்றி பேசினால் நாம் அங்குப் போக வேண்டும். இத்தனை நாள் சாமியார்களெல்லாம் சும்மா இருந்தோம். எங்களுக்கும் கல் எறியவும் தெரியும்; சோடா பாட்டில் வீசவும் தெரியும். ஆனால், அதைச் செய்ய மாட்டோம். எதற்கும் துணிவோம். மேலும் வருகிற பிப்ரவரி 3ஆம் தேதிக்குள் வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று ஜீயர் கூறினார்.

ஜீயரின் இந்தப் பேச்சுக்கு பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புக் குரல் வந்துள்ளது. இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார் இயக்குநர் பாரதிராஜா. தேனியில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “ஆண்டாள் சர்ச்சை விவகாரத்தில் வைரமுத்து வருத்தம் தெரிவித்தும் அதை ஏற்காமல், எங்களுக்கும் கல் எரியத் தெரியும், சோடா பாட்டில் வீசத்தெரியும் என்று ஜீயர் பேசி வருவது ஏற்கத்தக்கது அல்ல. ஒருவேளை மடாதிபதி ஆவதற்குக் கல் எரிவதும், சோடா பாட்டில் வீசுவதும் தான் தகுதி என்றால், தமிழகத்தில் பல பேர் அதற்குத் தகுதியானவர்களே. அதோடு அரிவாள் கொடுக்கிறோம் அதையும் ஜீயர் பழகிக்கொண்டால், இன்னும் வசதியாக இருக்கும்” என்று பாரதிராஜா தெரிவித்து உள்ளார்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

ஞாயிறு 28 ஜன 2018