மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 28 ஜன 2018

கிச்சன் கீர்த்தனா: சுவையான சீம்பால்!

கிச்சன் கீர்த்தனா: சுவையான சீம்பால்!

‘நேரமில்லாம ஓடிக்கிட்டிருக்கேன். இதுல புதுசா எங்க யோசிச்சு டிஷ்லாம் செய்யறது’ என அலுத்துக்கொள்பவர்களுக்காவே இன்று சீம்பால். இதைக் கடையில் வாங்கி சுவைத்திருப்பீர்கள் அல்லது கிராமங்களுக்குச் சென்றால் யார் வீட்டிலாவது தருவார்கள். அப்படிப்பட்ட சீம்பாலை நாமே வீட்டிலேயே செய்து சாப்பிடலாமே...

சீம்பால்

சுவையான நேர்த்தியான ஓர் இனிப்பு வகை சீம்பால். மாடு கன்று ஈன்ற உடன் சுரக்கும் பால் சீம்பால். இந்தப் பால்கொண்டு செய்யப்படும் இனிப்பு சீம்பாலாகும். சுரக்கும் அனைத்து பாலும் இளங்கன்றால் உட்கொள்ள இயலாது. அச்சமயம் எஞ்சிய பாலை இவ்வாறு பயன்படுத்தலாம்.

தேவையான பொருள்கள்:

சீம்பால் - 1 லிட்டர்

வெல்லம் – 2 மேஜைக்கரண்டி

ஏலக்காய் பொடி - கால் தேக்கரண்டி

செய்முறை:

பாலை நன்கு காய்ச்சவும். இடைவிடாது கிளறவும். பால் தானாக திரிந்துவரும். பிறகு நீர் வற்றி முக்கால் பாகமாக வரும் சமயம் பொடித்த வெல்லம் சேர்த்து கிளறவும். அதில் ஏலக்காய்த்தூள் சேர்த்து, சிறிது நீர்த்தன்மை இருக்கும்போது அடுப்பிலிருந்து அகற்றி விடவும். அதிகம் வேகும்போது மிருதுவாக இருக்காது. சுவையான சீம்பால் ரெடி.

கீர்த்தனா சிந்தனைகள்

நீங்க யாரை வேணா உயிரா நினைக்கலாம். அது உங்க உரிமை. ஆனா, அவங்களும் அப்படி நினைக்கணும்னு நாம சொன்னா, அதை விட மூடத்தனம் ஏதுமில்லை.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

ஞாயிறு 28 ஜன 2018