மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 28 ஜன 2018

பேருந்து கட்டணம் குறைப்பு!

பேருந்து கட்டணம் குறைப்பு!

சமீபத்தில் உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணத்தைக் குறைத்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கடந்த ஜனவரி 20ஆம் தேதி முதல் தமிழகத்தில் சாதாரண பேருந்துகளுக்கான கட்டணம் ரூ.1 உயர்த்தப்பட்டது. மாநகரப் பேருந்துகளுக்கான அதிகபட்சக் கட்டணம் ரூ.12ல் இருந்து ரூ.19ஆக உயர்ந்தது. விரைவுப் பேருந்துகளுக்கான கட்டணம் 30 கிலோ மீட்டருக்கு ரூ.17ல் இருந்து ரூ.24ஆக உயர்த்தப்பட்டது. இந்தக் கட்டண உயர்வை எதிர்த்து பொதுமக்களும், மாணவர்களும், அரசியல் கட்சியினரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

அரசின் இந்த கொள்கை முடிவையடுத்து மக்கள் ரயில் சேவையை அதிகம் பயன்படுத்த தொடங்கினர். கட்டணம் உயர்த்தப்பட்டும் போதிய வருவாய் கிடைக்கவில்லை என்று அரசு தரப்பு தெரிவித்தது.

இந்நிலையில் உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

குறைக்கப்பட்ட கட்டணத்தின் விவரம்

சாதாரண பேருந்துகளின் கட்டணம் 60 பைசாவிலிருந்து 58 பைசாவாகவும், விரைவு பேருந்துகளின் கட்டணம் 80 பைசாவிலிருந்து 75 பைசாவாகவும், சொகுசு பேருந்துகளில் 90 பைசாவிலிருந்து 85 பைசாவாகவும், அதிநவீன பேருந்துகளில் 110 பைசாவிலிருந்து 100 பைசாவாகவும் குளிர்சாதன பேருந்துகளில் 140 பைசாவிலிருந்து 130 பைசாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

நகர மற்றும் மாநகர பேருந்துகளில் குறைந்த பட்ச கட்டணம் ரூ.5 லிருந்து ரூ. 4 ஆக குறைக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகரப் பேருந்துகளில் குறைந்தபட்சக் கட்டணம் 4 ரூபாயாகவும் அதிகபட்சக் கட்டணமாக 22ரூபாயாகவும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மற்ற மாவட்ட பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.4 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.18 ஆகவும் மாற்றி தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்தத் திட்டம் நாளை ( ஜனவரி 29) முதல் அமலுக்கு வரும் என்று கூறப்படுகிறது. பேருந்து கட்டண குறைவு காரணமாக நாளொன்றுக்கு ரூ.4 கோடி நஷ்டம் ஏற்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கட்டண குறைப்பைத் தொடர்ந்து மக்கள் போராட்டத்தை கை விட வேண்டும் என்று அரசு கேட்டுக்கொண்டுள்ளது. ஆனால் அதிகளவிலான கட்டணத்தை உயர்த்திவிட்டு தற்போது சொற்ப அளவில் கட்டணத்தை குறைத்துள்ளதாக கூறி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

ஞாயிறு 28 ஜன 2018