மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 28 ஜன 2018

ரயில் மறியல்: விவசாயிகள் கைது!

ரயில் மறியல்: விவசாயிகள் கைது!

கர்நாடகத்திடமிருந்து உரிய நீரைப் பெற்றுத்தர கோரி தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட இடங்களில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பா சாகுபடி பருவம் முடிந்து அறுவடை தொடங்கவுள்ள நிலையில், டெல்டா பகுதியில் போதிய தண்ணீர் இல்லாமல் விளைச்சல் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையையும் சித்தராமையா நிராகரித்துவிட்டார். மேட்டூர் அணையில் இருப்பிலுள்ள நீர் தமிழகத்தின் குடிநீர்த் தேவைக்கே சரியானதாக இருக்கும். எனவே, காவிரியிலிருந்து நீர் பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் கர்நாடகத்திலிருந்து தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு வலியுறுத்த வேண்டுமெனக் கோரி இன்று டெல்டா மாவட்டங்களில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்த இந்தப் போராட்டத்துக்கு திமுக, மார்க்சிஸ்ட், மதிமுக உள்பட பல்வேறு கட்சிகளும் ஆதரவு தெரிவித்திருந்தன.

தஞ்சையில் காவல்துறையின் தடையை மீறி சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ரயில் மறியலில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டார். போராட்டத்தில் திமுக, மதிமுக, கம்யூனிஸ்டுகள், விசிக கட்சிகளும், விவசாய சங்கத்தினர் நூற்றுக்கணக்கானோரும் கலந்துகொண்டனர். மறியலில் ஈடுபட்ட வைகோ உள்ளிட்டோர் 100க்கும் மேற்பட்டோர் கைதும் செய்யப்பட்டனர்.

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் தலைமையில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. திருச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கலந்துகொண்டார். மறியல் போராட்டத்தில் 250 பேர் கைது செய்யப்பட்டனர். இதுபோல டெல்டா மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்களில் ஈடுபட்ட விவசாய சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர்.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

ஞாயிறு 28 ஜன 2018