மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 28 ஜன 2018

ஐ.பி.எல் ஏலம்: வீரர்கள் ரியாக்‌ஷன்!

ஐ.பி.எல் ஏலம்: வீரர்கள் ரியாக்‌ஷன்!

ஐ.பி.எல் தொடரில் இந்த வருடத்துக்கான ஏலம் நேற்று (ஜனவரி 27) தொடங்கியது. அதில் சென்னை அணிக்காகத் தேர்வு செய்யப்பட்ட இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், அவரது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் தனது மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளார். அதேபோல் அஸ்வின் மற்றும் கம்பீரும் தங்களது கருத்துகளை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

ஐ.பி.எல் தொடரின் 11ஆவது சீசன் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ளது. அதற்கான வீரர்கள் தேர்வு பெங்களூருவில் இரண்டு நாள்கள் (ஜனவரி 27, 28) நடக்கிறது. அதில் முதல் நாளான நேற்று தேர்வான வீரர்களில் சென்னை அணியால் தேர்வு செய்யப்பட்ட ஹர்பஜன் சிங் அவரது ட்விட்டர் பக்கத்தில், “வணக்கம் தமிழ்நாடு. உங்ககூட இனி கிரிக்கெட் ஆடப்போறது ரொம்ப சந்தோஷம். உங்க மண்ணு இனி என்னை வைக்கணும் சிங்கமுன்னு. எனது புதிய வீடான சென்னைக்காக விளையாடுவதில் மிகுந்த மகிழ்ச்சி” என பதிவிட்டுள்ளார். இதுவரை மும்பை அணிக்காக விளையாடிவந்த ஹர்பஜன் சிங் முதன்முறையாக வேறு அணிக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதுவும் ரூ.2 கோடிக்கு எளிதில் பெறப்பட்டுள்ளார்.

அவரைப் போல் அஸ்வினும் பஞ்சாப் அணியால் ரூ.7.6 கோடிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுவரை அவர் சென்னை மற்றும் புனே அணிக்காக ஐ.பி.எல் தொடரில் விளையாடியவர். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி எனது புதிய வீடாக இருக்கும் என்பதில் மகிழ்ச்சி. சென்னை சூப்பர் கிங்ஸ் எனக்கு வழங்கிய சிறப்பான நினைவுகளுக்கு மிகவும் நன்றி” எனப் பதிவிட்டிருந்தார்.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

ஞாயிறு 28 ஜன 2018