மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 28 ஜன 2018

41 கோடிப் பேருக்குப் பயனளித்த டி.பி.டி!

41 கோடிப் பேருக்குப் பயனளித்த டி.பி.டி!

நேரடிப் பரிமாற்றத் திட்டத்தால் (டி.பி.டி) இதுவரையில் 41 கோடிப் பேர் பயன்பெற்றுள்ளதாக நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் காந்த் கூறியுள்ளார்.

இதுகுறித்து சனிக்கிழமை அவர் கூறுகையில், “அரசாங்கத்தின் பல திட்டங்கள் டி.பி.டியுடன் இணைக்கப்பட்டுள்ளது. லஞ்சம் மற்றும் ஊழலை ஒழிக்கும் விதமாக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் மத்திய அரசு ரூ.650 கோடி வரையில் சேமித்துள்ளது. தற்போது டி.பி.டி சேவையில் அரசாங்கத்தின் 300 திட்டங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் மூலம் இதுவரையில் 41 கோடிப் பேர் பயன்பெற்றுள்ளனர். இந்தப் புதிய சேவையினால் அரசாங்கத்தின் பழைய 1,200 விதிமுறைகள் திருத்தம் செய்யப்பட்டு எளிமையாக்கப்பட்டுள்ளது. தற்போது ஒரு பக்கத்துக்கு மேல் எந்தப் படிவமும் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தொழில்புரிபவர்களுக்கும் எளிமையான வழிவகைகள் ஏற்பட்டுள்ளது” என்றார்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

6 நிமிட வாசிப்பு

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம ...

3 நிமிட வாசிப்பு

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்!

ஞாயிறு 28 ஜன 2018