மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 28 ஜன 2018

பெண் குழந்தையை விரும்பும் இந்தியர்கள்!

பெண் குழந்தையை விரும்பும் இந்தியர்கள்!

தினந்தோறும் படித்துவரும் செய்திகளில் இதைவிட ஒரு நல்ல செய்தி இருக்காது. பெண் குழந்தை பிறந்தாலே, நமக்கு ஒரு சுமை வந்துவிட்டது என நினைக்கும் மக்களிடத்தில், பெண் குழந்தைதான் வேண்டும் என்று கேட்கிற மக்களைப் பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது.

இந்தியாவில் 15 வயது முதல் 49 வயது வரையுள்ள 79 சதவிகித பெண்களும், 15 வயது முதல் 54 வயது வரையுள்ள 78 சதவிகித ஆண்களும் குறைந்தபட்சம் ஒரு பெண் குழந்தையாவது பிறக்க வேண்டும் என நினைக்கின்றனர் என தேசிய குடும்ப சுகாதார ஆய்வு தெரிவித்துள்ளது.

ஆச்சர்யமாக, எஸ்.சி, எஸ்.டி, முஸ்லிம், கிராம மக்கள் மற்றும் பொருளாதார ரீதியில் கீழ்மட்டத்தில் இருக்கும் ஆண்களும் பெண்களும் தங்களுக்கு ஒரு பெண் குழந்தை வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார்கள். 2005-06ஆம் ஆண்டில் தேசிய குடும்ப சுகாதார ஆய்வியிலிருந்து பெண் குழந்தைகளை விரும்பும் ஆண்களின் சதவிகிதம் 65 ஆகவும், பெண்களின் சதவிகிதம் 74 ஆகவும் உயர்ந்துள்ளது.

இந்தப் போக்கு இருக்கிறபோதிலும், மகன் வேண்டும் எனக் கேட்கும் பெற்றோர்களும் இருக்கின்றனர். 81 சதவிகிதக் கிராமப்புறப் பெண்களும், 75 சதவிகித நகர்புறப் பெண்களும் பெண் குழந்தையை விரும்புகின்றனர். 80 சதவிகிதப் கிராமப்புற ஆண்களும், 75 சதவிகித நகர்ப்புற ஆண்களும் பெண் குழந்தை வேண்டும் என்கின்றனர்.

79 சதவிகித எஸ்.சி மக்களும், 84 சதவிகித எஸ்.டி மக்களும் பெண் குழந்தையை விரும்புகின்றனர்.

பொருளாதாரத்தில் முன்னோக்கி இருப்பவர்களை இந்த வரிசையில் பார்க்கும்போது, 73 சதவிகித வசதிமிக்க பெண்களும் 72 சதவிகித வசதிமிக்க ஆண்களும் ஒரு பெண் குழந்தை வேண்டும் என்கின்றனர். ஆனால், 86 சதவிகித ஏழை பெண்களும், 85 சதவிகித ஏழை ஆண்களும் பெண் குழந்தை வேண்டும் என்கின்றனர்.

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் ...

3 நிமிட வாசிப்பு

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் கவலை!

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

3 நிமிட வாசிப்பு

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

3 நிமிட வாசிப்பு

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

ஞாயிறு 28 ஜன 2018