மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 28 ஜன 2018

தீபிகா காமமும் காதலும் ததும்பும் பேரழகி: வசந்த பாலன்

தீபிகா காமமும் காதலும் ததும்பும் பேரழகி: வசந்த பாலன்

பத்மாவத் படத்தைப் பார்த்த இயக்குநர் வசந்த பாலன் ‘தீபிகா காமமும் காதலும் ததும்பும் பேரழகி’ என்று புகழ்ந்திருக்கிறார்.

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோன், ரன்வீர் சிங், ஷாகித் கபூர் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘பத்மாவத்’. பல்வேறு மாநிலங்களில் எழுந்த எதிர்ப்புகளுக்கிடையே இந்தப் படம் ரிலீஸ் ஆகி ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், ‘பத்மாவத்’ படம் பார்த்த இயக்குநர் வசந்த பாலன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இந்தப் படத்தையும், தீபிகா படுகோனையும் புகழ்ந்து பேசியுள்ளார்.

“சஞ்சய் லீலா பன்சாலி திரையாக்கத்தில் வெளியான பத்மாவத் சரித்திரத் திரைப்படம் கண்டேன். படம், பற்றி கொழுந்து விட்டெரியும் பிரச்னைகளுக்கு எந்த அர்த்தமும் இல்லை. திரையின் ஒவ்வொரு பிரேமையும் பன்சாலியும் சுதீப் சட்டர்ஜியும் ஓவியங்களாகத் தீட்டியுள்ளார்கள். ஓர் ஓவியக் காட்சியைக் கண்கொள்ளாமல் பார்த்தது போன்ற அற்புதமான அனுபவம்.

தீபிகா படுகோனே இந்தியாவின் அத்தனை அழகையும் ஒருங்கமைவு செய்த பேரழகி. தீபிகாவின் ஒவ்வோர் அசைவுகளும் அழகுடன் அபிநயம் பிடிக்கிறது. ஐஸ்வர்யா ராய் பிளாஸ்டிக் அழகி. தீபிகா காமமும் காதலும் ததும்பும் பேரழகி. வேட்டையாட துடிக்கும் பேரழகு. ரன்வீர் சிங் அத்தனை நயங்களை நடிப்பில் வெளிப்படுத்தி உள்ளார். ஒளிப்பதிவிலும் இயக்கத்திலும் இது நேர்த்தியான உன்னத படைப்பு. ஒரு ஷாட்டும் அடுத்த ஷாட்டும் எத்தனை நளினமாக அழகியலுடன் எடுக்கப்பட்டு கோக்கப்பட்டுள்ளது. அதிகாலை நேரத்தின் ஒளி சிதறல்களை சுதீப் சட்டர்ஜீ மிக அற்புதமாக அமைத்துள்ளார். 3D தொழில்நுட்பத்தில் திரைப்படம் பார்த்தேன். ஆக மொத்தம் பேரனுபவம்” என்று புகழ்ந்திருக்கிறார்.

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

3 நிமிட வாசிப்பு

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

3 நிமிட வாசிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

ஞாயிறு 28 ஜன 2018