மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 28 ஜன 2018

பாஜகவுடன் எக்காலத்திலும் கூட்டணி கிடையாது!

பாஜகவுடன் எக்காலத்திலும் கூட்டணி கிடையாது!

‘பாஜகவுடன் இனி எக்காலத்திலும் கூட்டணி கிடையாது’ என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தி இந்து தமிழ் நாளிதழுக்கு இன்று (ஜனவரி 28) பேட்டியளித்துள்ளார்.

அவரிடம், ‘தினகரன் எந்தக் காலத்திலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று கூறிவிட்டார். ஆனால், நீங்கள் இன்னும் திட்டவட்டமாக அறிவிக்கவில்லையே’ என்ற கேள்விக்கு, “பல முறை சொல்லியிருக்கேன். ஒருமுறை தவறு செய்துவிட்டோம். இனி எக்காலத்திலும் பாஜக கூட்டணி கிடையாது. ஆனால், தினகரனுடன் என்னை ஒப்பிடாதீர்கள். பாஜக ஒப்புக்கொண்டால் கூட்டணிக்குப் போய் இருக்கக்கூடியவர்தான் அவர். பாஜக இவரை ஏத்துக்கலை. சுற்றிலும் வழக்குகள் அழுத்துகிறது என்பதற்காக இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். நான் மதவாத அரசியலைத் தொடர்ந்து எதிர்த்துக் கொண்டிருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ரஜினி, கமல் அரசியலுக்கு வருவது குறித்த கேள்விக்கு, “இரண்டு பேருமே தனிப்பட்ட முறையில் எனக்கு நல்ல நண்பர்கள். சினிமா இல்லை அரசியல். களத்துக்கு வரும்போது பார்க்கலாம்” என்று குறிப்பிட்ட அவரிடம், ‘ஆன்மிக அரசியல் என்னும் பதத்தை எப்படி பார்க்கிறீர்கள்?’ என்ற கேள்விக்கு, “ஆன்மிகத்தை நிறுவனமாக்க முற்படும்போதுதான் மதம் பிறக்குது. நிறுவனப்படுத்தப்பட்ட மதம் ஆட்சியதிகாரத்தைத் தன் கையில் வைத்து மக்களை வதைக்கும்போது மதச்சார்பின்மைங்கிற தத்துவம் பிறக்குது. ஆன்மிகத்தைத் தனியாகவும் அரசியலைத் தனியாகவும் பார்க்க அது நமக்கு கத்து தருது. ரஜினி மறுபடி தலைகீழாக்கப் பார்க்கிறார். நாட்டுக்கு அது நல்லது இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

3 நிமிட வாசிப்பு

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

15 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

3 நிமிட வாசிப்பு

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

ஞாயிறு 28 ஜன 2018