மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 28 ஜன 2018

மீனவர்கள் கைது: புதிய சட்டத்தின் கீழ் அபராதம்?

மீனவர்கள் கைது: புதிய சட்டத்தின் கீழ் அபராதம்?

ராமேஸ்வர மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது புதிய மீன்பிடி படகுகளுக்கான திருத்தச் சட்ட மசோதாபடி அபராதம் விதிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 1500க்கும் மேற்பட்ட மீனவர்கள், 400க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் மீன்பிடிக்க நேற்று கடலுக்குச் சென்றனர். இன்று அதிகாலை கச்சத் தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருக்கும்போது, எல்லைத் தாண்டி வந்ததாகக் கூறி இரண்டு படகுகளில் இருந்த 12 மீனவர்களை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களை அழைத்துச்சென்று தலைமன்னார் முகாமில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிறகு, அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கவுள்ளனர். ஏற்கெனவே இலங்கை சிறையில் 100க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் மீண்டும் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளது மீனவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் மீது புதிய மீன்பிடி திருத்தச் சட்டத்தின்படி அபராதம் விதிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை புதிய மீன்பிடி திருத்தச் சட்டம்

கடந்த இரு தினங்களுக்கு முன்பு எல்லைத் தாண்டி வருவோருக்கு ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.17 கோடி வரை அபராதம் விதிக்கும் மசோதா இலங்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

ஞாயிறு 28 ஜன 2018