மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 28 ஜன 2018

பேருந்து கட்டண உயர்வு: சிபிஐ(எம்) போராட்டம் அறிவிப்பு!

பேருந்து கட்டண உயர்வு: சிபிஐ(எம்) போராட்டம் அறிவிப்பு!

பேருந்து கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் தொடர் மறியல் போராட்டம் நடைபெறும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.

தமிழக அரசு, பேருந்து கட்டணத்தை உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்திவருகின்றனர்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி ஆகியவை ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையில், திமுக, அதன் தோழமை கட்சிகள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிப்ரவரி 1ஆம் தேதி முதல் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைத்து தரப்பு மக்களையும் கடுமையாகப் பாதிக்கும் அநியாய பேருந்து கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மாணவர்களும், அனைத்துப் பகுதி பொதுமக்களும், அரசியல் கட்சிகளும் போராடி வருகின்றனர். குறிப்பாக லட்சக்கணக்கான மாணவர்கள் கட்டண உயர்வை ரத்து செய்யும் வரை தொடர்ந்து போராடுவது என்ற உறுதியோடு வீதியில் இறங்கி வீரஞ்செறிந்த போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நியாயமான குரலை ஏற்று கட்டண உயர்வை ரத்து செய்வதற்கு பதிலாக, அடக்குமுறையை எடப்பாடி அரசாங்கம் ஏவி வருகிறது. ஏராளமான மாணவர்கள், இளைஞர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர், சிறைக் கொட்டடியில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் மாணவர் - வாலிபர் தலைமை மீது குறிவைத்து வேட்டையாடும் வகையில் கடுமையான கிரிமினல் வழக்குகளைப் புனைந்து சிறையில் அடைக்கும் நடவடிக்கைகளைத் தமிழக அரசு தீவிரப்படுத்துவதாகத் தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன” எனக் கண்டனம் தெரிவித்தார்.

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

3 நிமிட வாசிப்பு

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

3 நிமிட வாசிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

ஞாயிறு 28 ஜன 2018