மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 28 ஜன 2018

இலக்கை எட்டும் துறைமுகம்!

இலக்கை எட்டும் துறைமுகம்!

விசாகப்பட்டினம் துறைமுகம் 2017ஆம் ஆண்டு டிசம்பர் வரையிலான காலத்தில் 51 மில்லியன் டன் சரக்குகளைக் கையாண்டுள்ளதாக அதன் தலைவர் எம்.டி.கிருஷ்ண பாபு கூறியுள்ளார்.

விசாகப்பட்டினத்தில் வெள்ளிக்கிழமை (ஜனவரி 26) நடைபெற்ற நாட்டின் 69ஆவது குடியரசு தின நிகழ்வில் கலந்துகொண்டு அவர் பேசுகையில், “நடப்பு நிதியாண்டில் 64 மில்லியன் டன் சரக்குகளைக் கையாள விசாகப்பட்டினம் துறைமுகம் இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த இலக்கை உறுதியாக அடைவோம். நடப்பு நிதியாண்டின் நடந்து முடிந்த டிசம்பர் வரையில் 51 மில்லியன் டன் சரக்கைக் கையாண்டுள்ளோம். இது கடந்த டிசம்பரை விட 1.5 மில்லியன் டன் அதிகமாகும். சந்தையில் இதற்கான மிகுந்த சவால்களை நாங்கள் எதிர்கொண்டுள்ளோம்.

நீராவி நிலக்கரி மற்றும் கண்டெயினர் சரக்குகள் உள்ளிட்டவை திடீரென 3 மில்லியன் டன் அதிகரித்ததே சரக்கு கையாளுதல் அதிகரித்ததற்கு முக்கியக் காரணமாகவுள்ளது. அதேநேரத்தில் இரும்புத்தாது, பெட்ரோலியம் போன்ற சில சரக்குகளின் அளவுக் குறைந்துள்ளது. தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்தி உலக தரத்திலான சேவைகளை வழங்க தயாராகி வருகிறோம். விசாகப்பட்டினம் உருக்கு ஆலையின் மூலமாக மும்பை, கொச்சி மற்றும் அகமதாபாத்துக்கு உருக்கு வர்த்தகம் விசாகப்பட்டினம் துறைமுகம் வழியாகக் கையாளப்படுகிறது. நேபாளைச் சேர்ந்த 1,900 டி.இ.யூ. சரக்கு கண்டெயினர் விசாகப்பட்டினம் துறைமுகம் வழியாகக் கொண்டு செல்லவும் இருதரப்பு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இரும்புத்தாது கையாளுதலை மேம்படுத்த ரூ.580 கோடி எஸ்ஸார் நிறுவனத்தால் முதலீடு செய்யப்படுகிறது. இந்தப் பணிகள் விரைவில் முடிவடையும்” என்றார்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

ஞாயிறு 28 ஜன 2018