மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 28 ஜன 2018

ஸ்மார்ட்கார்டு இல்லாவிட்டாலும் வழங்கப்படும்!

ஸ்மார்ட்கார்டு இல்லாவிட்டாலும் வழங்கப்படும்!

‘ஸ்மார்ட் கார்டு இல்லாவிட்டாலும் அனைவருக்கும் ரேஷன் பொருள்கள் வழங்கப்படும்’ என்று உணவுத் துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

தமிழக உணவுத் துறை அமைச்சர் காமராஜ் கடந்த 25ஆம் தேதி பேசியபோது, “வரும் பிப்ரவரி 15ஆம் தேதிக்குள் அனைத்துக் குடும்ப அட்டைகளுக்கும் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்படும்” என்றும் “மார்ச் 1ஆம் தேதி முதல் ஸ்மார்ட் கார்டுகள் மூலம் மட்டுமே ரேஷன் பொருள்கள் வழங்கப்படும்” என்றும் கூறியிருந்தார். அமைச்சரின் ஸ்மார்ட் கார்டு குறித்த அறிவிப்பு, புதிய ஸ்மார்ட் கார்டு பெறாத பயனாளிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இன்று (ஜனவரி 28) திருவாரூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் காமராஜ் , “ஸ்மார்ட் கார்டு திட்டத்தை முழுமையாக அமல்படுத்துவது கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. அது தொடர்பாக 99 சதவிகிதம் பணிகள் முடிந்துவிட்டன. மார்ச் மாதத்துக்குள் பணிகள் முழுவதும் முடிவடையும். அப்படி இந்தத் திட்டத்தை விரைந்து முடிப்பதுதான் அரசின் எண்ணம்” என்று கூறினார்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

ஞாயிறு 28 ஜன 2018