மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 28 ஜன 2018

விஜய் சேதுபதி படத்தில் ‘டப்ஸ்மாஷ்’ மிர்ணாளினி

விஜய் சேதுபதி படத்தில் ‘டப்ஸ்மாஷ்’ மிர்ணாளினி

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் சூப்பர் டீலக்ஸ் படத்தில் ‘டப்ஸ்மாஷ்’ மூலம் புகழ்பெற்ற மிர்ணாளினி ரவி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.

ஆரண்ய காண்டம் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை ஆச்சர்யப்படுத்திய இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா, தனது அடுத்த படைப்பான சூப்பர் டீலக்ஸில் விஜய் சேதுபதி, பகத் ஃபாசில், சமந்தா, காயத்ரி, நதியா, மிஷ்கின் ஆகிய முன்னணி நட்சத்திரங்களோடு களம் இறங்கியுள்ளார். இதில் முக்கிய கதாபாத்திரத்தில் மிர்ணாளினி நடிக்க இருக்கிறார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், தியாகராஜா குமாரராஜா படத்தில் தான் நடிப்பதாகத் தெரிவித்திருப்பதுடன் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். விஜய் சேதுபதியின் ஷில்பா கேரக்டர் புகைப்படங்கள், சமந்தாவின் வேம்பு கேரக்டர் டீசர் வெளியாகி படத்துக்கான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்திருக்கிறது.

யுவன்சங்கர் ராஜா இசையமைக்க, பி.எஸ்.வினோத் மற்றும் நீராவ் ஷா ஒளிப்பதிவு செய்கின்றனர். இயக்குநர்கள் நலன் குமாரசாமி, மிஷ்கின், நீலன் ஷங்கர் ஆகியோர் துணை எழுத்தாளர்களாகப் பணியாற்றியுள்ளனர். டைலர் சடன் & கினோ ஃபிஸ்ட் நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்து வருகின்றன.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

ஞாயிறு 28 ஜன 2018