மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 28 ஜன 2018

இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்!

இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்!

தமிழகம் முழுவதும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. அதன்படி சென்னையில் 1,650 மையங்களில் 7 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று (ஜனவரி 28) நடைபெறுகிறது. குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று போலியோ சொட்டு மருந்து திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

சென்னை மாநகராட்சி சார்பில், 5 வயதுக்குட்பட்ட சுமார் 7.06 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்கு 1,640 சொட்டு மருந்து மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

குழந்தைகளுக்கு ஏற்கெனவே போலியோ சொட்டு மருந்து முறையாகக் கொடுத்திருந்தாலும் இன்று நடைபெறும் போலியோ சொட்டு மருந்து முகாமில் சொட்டு மருந்து போட்டுக்கொள்வது நல்லது.

சென்னை மாநகராட்சி நலவாழ்வு மையங்கள், அரசு மருத்துவமனைகள், பள்ளிகள், மருந்தகங்கள், சத்துணவு மையங்கள், தனியார் மருத்துவமனைகள், ரயில்வே நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் ஆகிய இடங்களில் சொட்டு மருந்து மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், மெரினா கடற்கரை, சுற்றுலா பொருட்காட்சி, கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையங்களில் நடமாடும் சொட்டு மருந்து மையங்கள் மூலம் சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. அடுத்த கட்டமாக வரும் மார்ச் 11ஆம் தேதி சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

தெற்கு ரயில்வேயில் உள்ள ஆறு கோட்டங்களிலும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இந்தச் சொட்டு மருந்து முகாம் சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களிலும் பிற மாவட்டங்களில் உள்ள ரயில் நிலையங்களிலும், ரயில்வே ஊழியர்கள் குடியிருப்புகளிலும் நடைபெறுகிறது. மேலும், ரயில்வே மருத்துவமனைகள் மற்றும் ரயில்வே சுகாதார மையங்களிலும் சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

ஞாயிறு 28 ஜன 2018