மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 28 ஜன 2018

ஏற்றம்கண்ட தங்கம் விலை!

ஏற்றம்கண்ட தங்கம் விலை!

கடந்த 14 மாதங்களில் இல்லாத அளவுக்குத் தங்கம் விலை 10 கிராமுக்கு 31,450 ரூபாயை வியாழக்கிழமை (ஜனவரி 24) எட்டியுள்ளது.

சர்வதேச அளவில் தங்க வர்த்தகம் அதிகரித்துள்ளதாலும், உள்ளூர் வியாபாரிகளின் வர்த்தகம் அதிகரித்துள்ளதாலும் கடந்த 14 மாதங்களில் இல்லாத அளவுக்குத் தங்கம் விலை வியாழக்கிழமையன்று 10 கிராமுக்கு 31,450 ரூபாயாக அதிகரித்துள்ளது. வெள்ளி விலை 41,000 ரூபாயை எட்டியுள்ளது. தொழில்துறை நிறுவனங்கள் மற்றும் நாணயத் தயாரிப்பு நிறுவனங்கள் அதிக அளவில் தங்கம் வாங்கியுள்ளதே விலையுயர்வுக்குக் காரணமாகவுள்ளது. சிங்கப்பூரில் கடந்த ஒன்றரை வருடங்களில் இல்லாத அளவுக்குத் தங்கம் 0.43 சதவிகிதம் விலையுயர்வைக்கண்டு அவுன்ஸ் ஒன்றுக்கு 1,363 டாலருக்கு விற்பனையானது. வெள்ளி 0.29 சதவிகிதம் விலையுயர்வைக்கண்டு அவுன்ஸ் ஒன்றுக்கு 17.58 டாலருக்கு விற்பனையானது. இந்தியாவைப் பொறுத்தவரையில் நேற்றும் (ஜனவரி 27) தங்கம் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக புவனேஷ்வரில் 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 33,436 ரூபாயை எட்டியுள்ளது.

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் ...

3 நிமிட வாசிப்பு

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் கவலை!

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

3 நிமிட வாசிப்பு

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

3 நிமிட வாசிப்பு

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

ஞாயிறு 28 ஜன 2018