மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 28 ஜன 2018

சூர்யா நடத்தும் குறும்படப் போட்டி!

சூர்யா நடத்தும் குறும்படப் போட்டி!

சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் மற்றும் மூவி பஃப் நிறுவனங்கள் இணைந்து நடத்தும் குறும்படப் போட்டி தொடங்கியுள்ளது.

இரண்டாம் ஆண்டுக்கான ஃபர்ஸ்ட் கிளாப் சீசன் 2 குறும்படப் போட்டியின் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. இதில் முன்னணி இயக்குநர்களான ராம், கார்த்திக் நரேன், நித்திலன், அருண் பிரபு புருஷோத்தமன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இயக்குநர் ராம் பேசுகையில், “மக்களையும், படைப்பாளிகளையும் பரவசப்படுத்தும் இடமாக இன்றும் திரையரங்கம் மட்டுமேயிருக்கிறது. பெரிய திரை, சுற்றிலும் இருட்டு, நவீன ஒலியமைப்பு எனப் பல விஷயங்களை சொல்லலாம். ஆனால், குறும்படம் என்பது வேறு வகையிலான கலை வடிவம். இங்கு குறும்படம் என்பது பெரிய படங்களை இயக்குவதற்கான ஒத்திகையாகவும், முன் அனுபவமாகவும்தான் இருக்கிறது. அதனால் குறும்படங்கள் கோடம்பாக்கத்தையே சுற்றிச் சுற்றி வருகிறது. இதைத் தவிர்த்து நீங்கள் கனடா, ஆஸ்திரேலியா, இலங்கை என எங்கேயிருந்தாலும், உங்களுடைய கதையைக் குறும்படமாக எடுத்தால், அது இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால், அது பெரிய திரையில் திரையிடப்படக்கூடிய வாய்ப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற படத்தைத் தமிழகத்தில் மட்டும் திரையிடாமல் இந்தியா மற்றும் உலக அளவிலான அனைத்துத் திரையரங்குகளில் திரையிடப்பட வேண்டும் என்ற வேண்டுகோளையும் இந்தத் தருணத்தில் முன்வைக்கிறேன். ஏனெனில் கனடா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, யாழ்பாணம் எனப் பல இடங்களிலும் திறமையான இளங்கலைஞர்கள் இருக்கிறார்கள். அவர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்வார்கள்” என்றார்.

இந்தப் போட்டி குறித்து க்யூப் சினிமா டெக்னாலாஜிஸ் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி அரவிந்த் பேசுகையில், “தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இந்தக் குறும்படப் போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டியின் தொடக்க விழாவுக்கு வருகை தந்த அனைத்து இளந்தலைமுறை இயக்குநர்களுக்குக் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். புதிய கதை களம், புதுமையான கதை சொல்லல், திறமையான படைப்பாளிகளை அடையாளம் காணுதல் போன்ற நோக்கங்களைக்கொண்டே இந்தக் குறும்படப் போட்டியைத் தொடங்கியிருக்கிறோம். தற்போதைய உலகம் முழுவதும் டிஜிட்டல் மயமாகிவிட்டதால் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் கதையை குறும்படமாக்கலாம். தங்களுடைய வாழ்க்கையை நடைபெற்ற அனுபவத்தை வைத்து ரசிகர்களைப் பரவசமடையச் செய்ய முடியும் என்று நினைப்பவர்கள் அனைவரும் இந்தப் போட்டியில் கலந்துகொள்ளலாம். இதற்கான பாதையைத்தான் நாங்கள் திறந்திருக்கிறோம். இதற்கு எங்களுடன் நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் தங்களுடைய பங்களிப்பை அளித்திருக்கிறது. இந்தக் குறும்படங்களுக்குத் தேவையான தொழில்நுட்ப உதவியை அளிக்க நாக் ஸ்டுடியோஸ் முன்வந்திருப்பதையும் நாங்கள் மனதார வரவேற்கிறோம்” என்றார்.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

ஞாயிறு 28 ஜன 2018