மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 28 ஜன 2018

காஞ்சி மடத்தில் மத்திய அமைச்சர்!

காஞ்சி மடத்தில் மத்திய அமைச்சர்!

காஞ்சி சங்கர மடத்தில் ஜெயேந்திரர், விஜயேந்திரரைச் சந்தித்து மத்திய அமைச்சர் கிரண் ரிஜூஜூ ஆசி பெற்றார்.

ஹெச்.ராஜா தந்தையின் நூல் வெளியீட்டு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டபோது ஆளுநர் உள்பட அனைவரும் எழுந்து நின்றனர். காஞ்சி மடத்தின் இளைய மடாதிபதி விஜயேந்திரர் மட்டும் அமர்த்திருந்தார். ஆனால், நாட்டுப்பண் இசைக்கப்பட்டபோது எழுந்து நின்றார். இது தமிழ் அமைப்புகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. விஜயேந்திரருக்கு எதிராக பல்வேறு அமைப்புகளும் போராட்டம் நடத்தி வருகின்றன. மதுரை, சென்னை உள்ளிட்ட இடங்களில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது.

விஜயேந்திரர் மன்னிப்புக் கேட்க வேண்டுமென பல்வேறு தமிழ் அமைப்புகளும் காஞ்சி மடத்தின் முன்பு போராட்டம் நடத்தின. திக தலைவர் வீரமணி வரும் பிப்ரவரி 3ஆம் தேதி வரை மன்னிப்பு கேட்க கெடு விதித்துள்ளார். இதையடுத்து காஞ்சிபுரம் மடத்துக்குக் காவல் துறை பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

ஞாயிறு 28 ஜன 2018