மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 28 ஜன 2018

கழிவறை: பெட்ரோல் பங்குகளுக்கு சென்னை மாநகராட்சி உத்தரவு!

கழிவறை: பெட்ரோல் பங்குகளுக்கு சென்னை மாநகராட்சி உத்தரவு!

சென்னையில் உள்ள அனைத்து பெட்ரோல் பங்குகளிலும் உள்ள கழிவறைகளைப் பொதுமக்கள் இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவில் 2014ஆம் ஆண்டில் தூய்மை இந்தியா இயக்கம் தொடங்கப்பட்டது. கடந்த இரு ஆண்டுகளாக தூய்மை நகரங்கள் குறித்த கணக்கெடுப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு, தூய்மை நகரங்களின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு பங்கேற்ற 434 நகரங்களில் சென்னை மாநகரத்துக்கு 235ஆவது இடம் கிடைத்தது. இந்தாண்டு தூய்மை நகர கணக்கெடுப்பு தொடங்கியிருக்கிறது. இது மார்ச் 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்தக் கணக்கெடுப்பில், நகர உள்ளாட்சி அமைப்புகள், மத்திய அரசின் நேரடி கள ஆய்வு, பொதுமக்கள் தெரிவிக்கும் கருத்து ஆகியவற்றின் அடிப்படையில்தான் தூய்மை நகரம் தெரிந்தெடுக்கப்படும். இதற்கு மொத்தம் நான்காயிரம் மதிப்பெண்.

இந்த நிலையில், அனைத்து பெட்ரோல் பங்குகளிலும் உள்ள கழிவறைகளை மக்கள் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

3 நிமிட வாசிப்பு

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

15 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

3 நிமிட வாசிப்பு

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

ஞாயிறு 28 ஜன 2018