மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 28 ஜன 2018

அதிகரித்துவரும் ஏ.சி பயணங்கள்!

அதிகரித்துவரும் ஏ.சி பயணங்கள்!

டிசம்பரில் ஏ.சி ரகப் பெட்டிகளில் பயணித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ரயில்வே வாரியம் கூறியுள்ளது.

இதுகுறித்து ரயில்வே வாரியம் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது: ‘2017ஆம் ஆண்டின் இறுதி மாதமான டிசம்பரில் விடுமுறைக் காலம் உள்ளிட்ட காரணங்களால் ஏ.சி பெட்டிகளில் பயணித்தவர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்துள்ளது. ஏ.சி-1 பெட்டியில் பயணித்தவர்கள் எண்ணிக்கை 16 சதவிகிதமும், ஏ.சி-3 பெட்டியில் பயணித்தவர்கள் எண்ணிக்கை 12 சதவிகிதமும் டிசம்பரில் அதிகரித்துள்ளது. ஏ.சி-2 பெட்டியில் 7 சதவிகிதம் பேர் கூடுதலாகப் பயணித்துள்ளனர்.

ஏ.சி-1 பெட்டியில் 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 2017 டிசம்பரில் 35,658 பயணிகள் கூடுதலாகப் பயணித்துள்ளனர். ஏ.சி-2 பெட்டியில் 2016ஆம் ஆண்டு டிசம்பரை விட 2017 டிசம்பரில் 55,437 பேர் கூடுதலாகப் பயணித்துள்ளனர். ஏ.சி-3 பெட்டியில் 2016ஆம் ஆண்டு டிசம்பரை விட 2017 டிசம்பரில் 8.56 லட்சம் பேர் கூடுதலாகப் பயணித்துள்ளனர்.’

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

ஞாயிறு 28 ஜன 2018