மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 28 ஜன 2018

முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டம்!

முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டம்!

ஆஸ்திரேலிய ஓப்பன் தொடரின் இறுதிப்போட்டியில் கரோலின் வோஸ்னியாக்கி வெற்றி பெற்று முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தைப் பெற்றுள்ளார்.

மெல்போர்னில் நடைபெற்றுவரும் ஆஸ்திரேலிய ஓப்பன் தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் தரவரிசையில் இரண்டாம் நிலையில் உள்ள வோஸ்னியாக்கி, உலகின் முதல் நிலை வீராங்கனையான சிமோனா ஹலேப் உடன் மோதினார்.

இருவரும் தரவரிசையில் மட்டுமல்ல; திறமையிலும் மிக அருகாமையில் இருந்தனர் என்பது நேற்றைய போட்டியில் தெரிய வந்தது. முதல் செட்டில் வோஸ்னியாக்கி 7-6 என்ற செட்கணக்கில் போராடி வெற்றி பெற்றார். ஆனால், இரண்டாவது செட்டில் ஹலேப் 6-3 என எளிதில் வீழ்த்தி போட்டியை சமன் செய்தார். இருப்பினும் வெற்றியைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி செட்டில் இருவரும் சிறப்பாக விளையாடினர். எளிதில் விட்டுக்கொடுக்காமல் சரிசமமாக இருவரும் நீண்ட நேரம் விளையாடினர். இருப்பினும் 6-4 என்ற செட் கணக்கில் வோஸ்னியாக்கி வெற்றி பெற்று அவரது முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தைத் தட்டிச் சென்றார்.

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

3 நிமிட வாசிப்பு

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

15 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

3 நிமிட வாசிப்பு

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

ஞாயிறு 28 ஜன 2018