மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 28 ஜன 2018

பியூட்டி ப்ரியா: உதட்டுக்கு முக்கியத்துவம்!

பியூட்டி ப்ரியா: உதட்டுக்கு முக்கியத்துவம்!

எந்த ஓர் உதடு தொடர்பான ஒப்பனைப் பொருள்களைப் பயன்படுத்தும் முன்னர் உதடு பகுதியின் மேல்பரப்பை சுத்தம் செய்ய வேண்டும். காய்ந்த, சோர்வான வெடிப்புகள்கொண்ட உதடுகளுக்கு மேக்கப் போடுவது சரியான தீர்வை தராது. ஆகவே, உதட்டின் மேல்பரப்பில் உள்ள இறந்த செல்களைப் பல் துலக்கும் பிரஷ் பயன்படுத்தி சுத்தம் செய்ய வேண்டும். இதை வீட்டில் உள்ள பொருள்களைப் பயன்படுத்தியே செய்யலாம்.

ஒரு டீஸ்பூன் சர்க்கரை எடுத்து தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயுடன் சேர்த்து கலந்து உதட்டில் தடவலாம். உதட்டில் தடவியதுடன் கைகளால் மென்மையாக மசாஜ் செய்யலாம். பிறகு தண்ணீரால் முகத்தை கழுவலாம். இதைச் செய்யாமல் மேக்கப் போடுவதால், உதடுகள் சிறியதாகத் தோன்றும்.

அதேநேரத்தில், உதட்டின் உட்பகுதியில் ஒட்டியிருக்கும் லிப்ஸ்டிக்கை அகற்றி விடுங்கள். உங்கள் விரலால் உதட்டை அழுத்தி எடுக்கும்போது தேவைக்கு அதிகமான லிப்ஸ்டிக் உங்கள் கைகளில் ஒட்டிக்கொள்ளும். அவை பற்களில் படியாமல் தடுக்கப்படும்.

அடுத்ததாக மூக்கு

மூக்கு பெரிதாக உள்ள பெண்கள் மூக்கின் நுனியில் கொஞ்சம் அதிகமாக மேக்கப் போட்டுக்கொள்ள வேண்டும். அப்படி போட்டுக்கொண்டால் அவர்களின் மூக்குப் பார்ப்பதற்குச் சின்னதாகத் தெரியும்.

மூக்குக் கண்ணாடி அணிந்துகொண்டிருக்கும் பெண்களுக்குக் கண்களின் அழகு கொஞ்சம் குறையும். மூக்குக் கண்ணாடி அணியும் இந்தப் பெண்கள் கொஞ்சம் பட்டையாகவே தங்கள் கண் இமைகளுக்கு மை தீட்டிக்கொள்ள வேண்டும்.

சப்பை மூக்கு: மூக்கின் நடுப்பகுதியில் மட்டும் நீளவாக்கில், சரும நிறத்தைவிட லைட்டான நிறத்தில் காம்பேக்ட் பவுடரும், மற்ற இரு பக்கங்களிலும் சரும நிறத்தைவிட டார்க்கான நிறத்தில் பவுடரும் போட்டால் மூக்கு எடுப்பாக தெரியும்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

ஞாயிறு 28 ஜன 2018