மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 28 ஜன 2018

அதுல்யா படத்தைச் சிறுவர்கள் பார்க்க முடியாது!

அதுல்யா படத்தைச் சிறுவர்கள் பார்க்க முடியாது!

அதுல்யா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ஏமாலி’ படத்தை 18 வயதுக்குட்பட்டவர்கள் பார்க்க முடியாது.

காதல் கண்கட்டுதே படத்துக்குப் பிறகு தனது இரண்டாவது படத்திலே ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்திருக்கிறார் நடிகை அதுல்யா. இந்தப் படத்தில் சமுத்திரக்கனி கதையைத் தாங்கிப் பிடித்தாலும் அதுல்யாவால்தான் படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. அதற்குப் படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ள அதுல்யாவின் காட்சிகள்தான்.

இந்தப் படத்தின் டீசரில் அதுல்யா கவர்ச்சியாகவும், ஸ்டைலாக புகைபிடிக்கும் காட்சிகளும் இடம்பெற்றன. இது ரசிகர்களிடையே பெரும் விமர்சனத்துக்குள்ளானதுடன் படத்துக்கான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச்செய்தது. இந்த டீசரைப் பார்க்கும்போதே கண்டிப்பாகத் தணிக்கையில் ‘ஏ’ சான்றிதழ் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல்தான் இந்தப் படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ் கிடைத்திருக்கிறது.

வி.இசட்.துரை இயக்கத்தில் உருவாகியிருக்கும் இதில் சமுத்திரக்கனி, அதுல்யா தவிர சாம் ஜோன்ஸ், பெங்களூரு பெண்ணான ரோஷிணி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படம் பிப்ரவரி 2ஆம் தேதி வெளிவரவிருக்கிறது.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

ஞாயிறு 28 ஜன 2018