மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 28 ஜன 2018

மீனவர் பிரச்னை: சர்வதேச தீர்வு தேவை!

மீனவர் பிரச்னை: சர்வதேச தீர்வு தேவை!

‘மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்காவிட்டால் சர்வதேச அளவில் இந்தப் பிரச்னையை மத்திய அரசு கொண்டு செல்ல வேண்டும்’ என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை அரசு கடந்த சில நாள்களுக்கு முன்பு புதிய மீன்பிடி சட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. இந்தச் சட்டத்தின் மூலமாக எல்லை தாண்டி மீன்பிடிக்க வரும் தமிழக மீனவர்களுக்கு ரூபாய் 40 லட்சம் முதல் 15 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்க முடியும். இந்த நிலையில் தமிழக முதல்வர், ‘இலங்கை அரசு கொண்டுவந்துள்ள புதிய சட்டத்தில் சட்டத் திருத்தம் கொண்டுவரக்கோரி இந்திய அரசு அழுத்தம் தர வேண்டும்’ எனப் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியிருந்தார்.

இதுகுறித்து நேற்று (ஜனவரி 27) செய்தியாளர்களைச் சந்தித்த இலங்கை அமைச்சர் மஹிந்த அமரவீர, ‘தமிழக மீனவர்களுக்கென தனிச்சட்டம் இயற்ற முடியாது’ என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார்.

இந்த நிலையில் நேற்று (ஜனவரி 27) புதுவை மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் நாராயணசாமி, “மத்தியில் நரேந்திர மோடி அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து இலங்கை கடற்படையினர் தமிழகம் மற்றும் புதுவை மீனவர்களை அதிகளவில் கைது செய்துள்ளனர். இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்று குற்றம் சாட்டினார்.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

ஞாயிறு 28 ஜன 2018