மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 28 ஜன 2018

வெடிகுண்டு ஆம்புலன்ஸ் வெடித்ததில் 63 பேர் பலி!

வெடிகுண்டு ஆம்புலன்ஸ் வெடித்ததில் 63 பேர் பலி!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் வெடிகுண்டுகளுடன் வந்த ஆம்புலன்ஸ் வெடித்ததில் 63 பேர் உயிரிழந்ததாகவும், 151 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் வெளிநாட்டுத் தூதரகங்கள் உள்ள பகுதியில் உள்ள சோதனைச் சாவடிக்கு ஓர் ஆம்புலன்ஸ் வந்தது. அந்த ஆம்புலன்ஸைக் காவலர்கள் தடுத்து நிறுத்தியபோது, அதில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டைத் தீவிரவாதிகள் வெடிக்கச் செய்தனர். இந்தத் தாக்குதலில் காவல் துறையினர், அப்பகுதியில் நின்றிருந்த பொதுமக்கள் என 63 பேர் உயிரிழந்தனர்.

தகவல் அறிந்தவுடன் உடனடியாக விரைந்து வந்த காவல் துறையினரும் ராணுவத்தினரும் காயமடைந்தோரை மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த 151 பேர் காபூல் நகரின் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதலுக்குத் தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாகத் தகவல் தெரிவிக்கிறார்கள்.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

ஞாயிறு 28 ஜன 2018