மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 28 ஜன 2018

ஹெல்த் ஹேமா: மூக்கில் நோய்கள் வராமல் இருக்க...

ஹெல்த் ஹேமா: மூக்கில் நோய்கள் வராமல் இருக்க...

சைனஸ் தொந்தரவு உடையவர்கள் தினமும் ஆவி பிடிக்கலாம். அதில் உள்ள வெப்பக்காற்று சளியை இளகவைத்து வெளியேற்றிவிடும். அப்போது நன்றாக மூக்கைச் சிந்தி சளியை வெளியே எடுத்துவிட வேண்டும்.

ஒரு நாளைக்கு இரண்டு மூன்று முறை ஆவி பிடிப்பது நல்லது. அதற்கு வசதி இல்லாதவர்கள் தினமும் ஒருமுறையாவது ஆவி பிடிக்கலாம். மூச்சுப் பயிற்சி, யோகாசனம் செய்யலாம். நல்ல காற்றோட்டமான இடத்தில் இந்தப் பயிற்சிகளைச் செய்யலாம்.

குழந்தையின் உடல்வளர்ச்சி மற்றும் உறுப்புகளின் வளர்ச்சி குறைவாகவே இருக்கும் என்பதால் சைனஸ் தொந்தரவு வருவதற்கான வாய்ப்புகள் குறைவு. சிறு வயதிலேயே சைனஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் மருந்து மாத்திரையில் சரிசெய்ய முயற்சிக்கவும். அறுவை சிகிச்சைதான் தீர்வாக இருக்க முடியும் என்ற நிலை எனில் 10 வயது வரை மருந்து மாத்திரைகள் கொடுத்து நோயின் வீரியத்தை அதிகப்படுத்தாமல் காலம் தள்ளியபின் அறுவை சிகிச்சை செய்யலாம்.

குழந்தைகளிடம் ஒரு பழக்கம் உண்டு. எப்போது பார்த்தாலும் மூக்கில் விரலை நுழைத்துக் குடைந்துகொண்டிருப்பார்கள். இன்னும் சிலர் குச்சி, பல்பம், பேனா, பென்சில் என்று ஏதாவது ஒரு பொருளை மூக்கில் நுழைத்துக் குடைவார்கள். இதன் விளைவாக, லிட்டில்ஸ் ஏரியாவில் புண் உண்டாகி, ரத்தக் கசிவு ஏற்படும்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

ஞாயிறு 28 ஜன 2018