மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 28 ஜன 2018

ராம் கோபால் வர்மா மீது வழக்கு பதிவு!

ராம் கோபால் வர்மா மீது வழக்கு பதிவு!

பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா மீது சமூகநல அமைப்பைச் சார்ந்தவர்கள் வழக்குத் தொடுத்துள்ளனர்.

சர்ச்சை இயக்குநர் எனப் பெயர்பெற்ற ராம் கோபால் வர்மா அமெரிக்காவின் பிரபல கவர்ச்சி பட நடிகையான மியா மல்கோவாவைக் கதையின் நாயகியாகக்கொண்டு 'GOD, SEX and TRUTH' என்ற பெயரில் குறும்படம் ஒன்றை இயக்கினார். இந்தப் படத்தின் மேக்கிங் வீடியோ மற்றும் படங்கள் சமீபத்தில் இணையதளத்தில் வெளியானது. இதில் முழு நிர்வாணமாக இருக்கும் மியா மல்கோவாவுக்கு ராம் கோபால் வர்மா நடிப்பு சொல்லிக்கொடுப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதனால் அப்போதே பெரும் சர்ச்சைகள் கிளம்பின.

இந்தப் படத்தை தியேட்டரில் வெளியிட தியேட்டர் உரிமையாளர்கள் முன்வரவில்லை என்பதால் இணையதளத்தில் வெளியிடுவதற்கான முகவரியையும் குறிப்பிட்டு அந்தக் குறும்படத்தை நேற்று (ஜனவரி 27) வெளியிட்டார் ராம் கோபால் வர்மா. இந்தப் படத்தால் தற்போது ராம் கோபால் வர்மாவுக்கும், மியா மல்கோவாவுக்கும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இருவர் மீதும் சமூகநல அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஐதராபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரில், “இந்தியக் கலாசாரத்தைக் கெடுத்து இளைஞர்களை நாசமாக்கும் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்தப் புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார் இருவர் மீதும் 2000ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 67ஆவது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சமூக ஆர்வலர்கள் கொடுத்த புகாரின் பேரில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், சமூக ஊடகங்களில் ராம் கோபால் வர்மாவால் வெளியிடப்பட்ட சில புகைப்படங்கள் தொடர்பாகவும் புகார் கூறப்பட்டு உள்ளது. இருவரும் கைது செய்யப்பட வாய்ப்பிருப்பதாகத் தெலுங்கு சினிமாவுலகில் பேசப்பட்டு வருகிறது.

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

3 நிமிட வாசிப்பு

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

15 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

3 நிமிட வாசிப்பு

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

ஞாயிறு 28 ஜன 2018