மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 28 ஜன 2018

எங்களையும் இப்படித்தான் நடத்தினீர்கள்!

எங்களையும் இப்படித்தான் நடத்தினீர்கள்!

குடியரசு தின விழாவில் ராகுல் காந்திக்கு இருக்கை ஒதுக்கப்பட்ட விவகாரத்தில் தங்களையும் காங்கிரஸ் இவ்வாறுதான் நடத்தியதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

குடியரசு தின விழா நாடு முழுவதும் நேற்று முன்தினம் (ஜனவரி 26) சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. ஆண்டுதோறும் டெல்லி ராஜபாதையில் நடக்கும் அணிவகுப்பு நிகழ்ச்சியைக் காண விஐபிக்களுக்கு இருக்கைகள் ஒதுக்கப்படும். அந்தவகையில் இந்த ஆண்டு நடைபெற்ற நிகழ்வில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் மாநிலங்களைவை எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத் ஆகியோருக்கு நான்காவது வரிசையில் அமர்வதற்கு இருக்கைகள் ஒதுக்கப்பட்டுப் பிறகு, ஆறாவது வரிசையில் மாற்றியமைக்கப்பட்டது. ஆறாவது வரிசையில் ராகுல் காந்திக்கு இருக்கை ஒதுக்கப்பட்டது குறித்து காங்கிரஸ் கட்சி, பாஜகவைக் கடுமையாக விமர்சனம் செய்திருந்தது.

இந்நிலையில், இது தொடர்பாக நேற்று (ஜனவரி 27) செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக செய்தி தொடர்பாளர் ஜி.வி.எல். நரசிம்மன், “காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்திக்கு இருக்கை ஒதுக்கியதில் எந்தவிதமான மரபுகளும் மீறப்படவில்லை. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் எங்கள் கட்சியின் தலைவர்களுக்கு அப்போது என்ன விதிமுறை பின்பற்றப்பட்டதோ அதே விதிமுறைகள்தான் இப்போதும் பின்பற்றப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசும்போது, “ராகுல் காந்தி தன்னை சூப்பர் விஐபியாக கூறிக்கொள்ள முயல்கிறார். எல்லோருக்கும் முன்பாக அமரவைக்க வேண்டும் என எண்ணும் அளவுக்கு அவர் எந்தவிதமான முக்கியப் பதவியிலும் இல்லை. அவரை ஆறாவது வரிசையில் அமர வைத்ததில் எந்தவிதமான மரபுமீறலும் இல்லை. பாஜக சட்டம், விதிமுறைகளையும் மட்டும் பின்பற்றவில்லை, கட்சித் தலைவர்களின், எதிர்க்கட்சித் தலைவர்களின் மரியாதை காக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது” என்றும் நரசிம்மன் கூறினார்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

ஞாயிறு 28 ஜன 2018