மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 27 ஜன 2018

பேருந்துக் கட்டண உயர்வுக்குப் பின்பும் நஷ்டம்!

பேருந்துக் கட்டண உயர்வுக்குப் பின்பும் நஷ்டம்!

பேருந்துக் கட்டண உயர்வுக்குப் பின்னரும் போக்குவரத்துத் துறை நஷ்டத்தில்தான் இயங்குகிறது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று (ஜனவரி 27) செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், “கனத்த இதயத்துடன் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. பேருந்துக் கட்டண உயர்வு குறித்து, ஸ்டாலின் சொல்வதை மக்கள் நம்பத் தயாராக இல்லை. தொழிலாளர்களுக்கு எதிரான அரசு எது, உற்ற நண்பனான அரசு எது என்பது மக்களுக்குத் தெரியும். திமுக ஆட்சிக் காலத்தில் எப்போது மின்சாரம் இருக்கும், எப்போது போகும் என்பதே தெரியாது. ஆனால் தற்போது 24 மணி நேரமும் மின்சாரம் வழங்கப்படுகிறது. அப்படி இருக்கையில் அவர் எங்களை விமர்சிப்பது நகைப்புக்குரியதாக உள்ளது” என்று தெரிவித்தார்.

ஜீயர் சடகோப ராமானுஜர் பற்றிய கேள்விக்கு, ”சோடா பாட்டிலை வீசுவேன் என்பது ஏற்புடையதல்ல. ஜனநாயக நாட்டில் எப்படி வேண்டுமானாலும் பேசுவேன் என்பதை அனுமதிக்க வேண்டும். யாராக இருந்தாலும் பொறுப்புடன் பேச வேண்டும். சட்டப்படிதான் நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, சோடா பாட்டிலை வீசுவேன் என்று கூறியது சரியல்ல. இந்தப் பேச்சு கண்டிக்கத்தக்கது” என்று குறிப்பிட்டார்.

மேலும், ”பேருந்துகளில் பயணக் கட்டணத்தை உயர்த்திய பின்பும் போக்குவரத்துத் துறை நஷ்டத்தில்தான் இருந்துவருகிறது” என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

சனி 27 ஜன 2018