மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 27 ஜன 2018

மக்களைப் பயமுறுத்திய கடல்!

மக்களைப் பயமுறுத்திய கடல்!

காரைக்காலில் இன்று திடீரென கடல் உள்வாங்கியதால் பொதுமக்களும் மீனவர்களும் அச்சத்தில் உள்ளனர்.

காரைக்காலில் கடந்த 2 நாட்களாக கடல்நீர் உள்வாங்கிக் காணப்படுவதாகக் கூறப்படுகிறது. இதேபோல், ஆற்றுப்பகுதியின் முகத்துவாரத்திலும் சுமார் 10 மீட்டர் நீர் உள்வாங்கியுள்ளதாகக் கிராம மக்கள் கூறிவருகின்றனர். திடீரெனக் கடல் உள்வாங்கியிருப்பதால், அப்பகுதி மீனவர்களும், மக்களும் சுனாமி ஏற்படுமோ என்ற அச்சத்தில் உள்ளனர். மேலும், கடல் உள்வாங்கியது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கடல் உள்வாங்கியதால் ஆற்றின் முகத்துவாரத்தில் விசைப்படகுகள் சிக்கியுள்ளன. மீண்டும் நீர் வந்தால் மட்டுமே அதை மீண்டும் மீட்க முடியும் என்று மீனவர்கள் தெரிவித்துள்ளனர். முன்னதாக, கடந்த 22ஆம் தேதியன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் பாம்பன் தெற்குவாடி, மண்டபம், தோணித்துறை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 50 மீட்டர் வரை கடல் உள்வாங்கியது குறிப்பிடத்தக்கது.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

சனி 27 ஜன 2018