மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 27 ஜன 2018

ஹீரோக்களுக்கு அனுஷ்கா ஆதரவு!

ஹீரோக்களுக்கு அனுஷ்கா ஆதரவு!

நடிகர்கள் அதிக சம்பளம் வாங்குவது குறித்து கருத்து தெரிவித்துள்ளார் நடிகை அனுஷ்கா.

ஆண் நடிகர்களுக்கு இணையாக நடிக்கக்கூடிய நடிகைகளில் குறிப்பிட்டுச் சொல்லும் இடத்தில் உள்ளவர் நடிகை அனுஷ்கா. இவர் நடிப்பில் வெளியான அருந்ததி, பாகுபலி, பாகமதி உள்ளிட்ட அனைத்து படங்களிலும் தன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். அதிலும் அனுஷ்கா, நயன்தாரா உள்ளிட்ட சில நடிகைகள் தொடர்ந்து ஹீரோயினுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரங்களையே தேர்வு செய்து நடித்துவருகிறார்கள்.

அதே போல் சினிமா நடிகைகளைப் பொறுத்தவரையில் என்ன தான் தங்கள் நடிப்பில் கோலோச்சிநின்றாலும் நடிகர்களைவிட இவர்களின் சம்பளம் என்னவோ குறைவாகத்தான் இருக்கிறது. சினிமா சார்ந்து எந்தவொரு பிரச்சினை வந்தாலும், உடனே ஹீரோக்கள் சம்பளம் பற்றிய விஷயமும் முக்கிய விஷயமாகப் பேசப்படும். ஹீரோக்கள் சம்பளத்தைக் குறைத்தாலே எல்லாம் சரியாகிவிடும் என்ற பேச்சுக்கள் எழத் தொடங்கிவிடும். இந்த நிலையில் நடிகர்கள் அதிக சம்பளம் வாங்குவது குறித்து அனுஷ்கா கருத்து கூறியுள்ளார்.

சமீபத்தில் கேரளாவில் நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட அனுஷ்காவிடம் ஹீரோக்களுக்குக் கொடுக்கப்படும் சம்பளம் ஹீரோயினுக்குக் கொடுக்கப்படுவதில்லையே, இந்த பாகுபாடு ஏன் என்று கேட்கப்பட்டபோது, “சம்பள விஷயத்தில் ஹீரோக்களுக்கு அதிக சம்பளம் கொடுப்பதுதான் சரி. ஒரு படத்தில் கடுமையான உழைப்பைக் கொட்டி அவர்கள் நடிக்கிறார்கள். ஒரு படம் ஃபிளாப் ஆகும்போது அதற்கான பெயரை அவர்கள்தானே ஏற்றுக்கொள்கிறார்கள். அந்த விஷயத்தில் நடிகைகளுக்கு பாதிப்பிலையே” என்று தெரிவித்துள்ளார்.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

சனி 27 ஜன 2018