மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 27 ஜன 2018

கட்டணத்துக்கு பதிலாக பேருந்தை மாற்றிவிட்டோம்!

கட்டணத்துக்கு பதிலாக பேருந்தை மாற்றிவிட்டோம்!

பேருந்து கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு அதிகரித்து வருவதையடுத்து,1050 சாதாரண கட்டண பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

சமீபத்தில், உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணத்தால், ஏழை, நடுத்தர மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், பெரும்பாலான மக்கள் பறக்கும் ரயில்களிலும், மெட்ரோ ரயில்களிலும் பயணிக்க தொடங்கிவிட்டனர். மேலும், கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், சாதாரண பேருந்துகளின் எண்ணிக்கை 1050 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், பொதுமக்களின் கோரிக்கைக்கு ஏற்ப சென்னையில் இயக்கப்படும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாநகர பேருந்துகளில் 1050 பேருந்துகள் சாதாரண கட்டண பேருந்தாக இயக்கப்படுகின்றன. டீலக்ஸ், எக்ஸ்பிரஸ் பேருந்தாக இருந்தாலும் அதில் “ஒயிட்போர்டு” வைத்து சாதாரணக் கட்டண பேருந்துகளாக இயக்குகிறோம். ஒயிட்போர்டு இல்லாமல் இருக்கும் பேருந்துகளில் வெள்ளை நிறத்தில் எழுதி ஒட்டி பயணிகளுக்கு தெரியும்படி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

புதிதாக உயர்த்தப்பட்டுள்ள கட்டண விவரம் குறித்தும் அனைத்து மாநகர பேருந்துகளிலும் பயணிகளுக்கு தெரியும் வகையில் ஒட்டப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் இந்த பேருந்துகளின் எண்ணிக்கை அதிரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

மற்றொரு பக்கம் நீண்ட தூரம் செல்லும் 300க்கும் மேற்பட்ட பேருந்துகளை குறுகிய தூர பேருந்துகளாக மாற்றப்பட்டுள்ளது.

நீண்ட தூரத்துக்கு ஒரே பேருந்துகளை இயக்கியபோது போக்குவரத்து நெரிசல் காரணமாக பேருந்துகள் நிற்பதால் 20 நிமிடத்துக்கு ஒரு பேருந்து வருவதாக பயணிகள் புகார் தெரிவித்தனர். பேருந்துகளின் எண்ணிக்கையை குறைக்காமல் அதே அளவில் பேருந்துகளை குறுகிய தூரம் வரை இயக்குகிறோம். மக்களுக்காகவே கட் சர்வீஸ் இயக்கப்படுகிறது என போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கட் சர்வீஸ் என்றாலும், இரண்டு மூன்று பேருந்துகள் மாறி செல்ல வேண்டும்.குறிப்பாக, செல்ல வேண்டிய இடத்துக்கு சரியான நேரத்துக்கு செல்ல முடியாது என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

சனி 27 ஜன 2018