மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 27 ஜன 2018

சிந்துவை வீழ்த்தி அரையிறுதியில் சாய்னா

சிந்துவை வீழ்த்தி அரையிறுதியில் சாய்னா

இந்தோனேசியா மாஸ்டர்ஸ் தொடரில் பி.வி.சிந்துவை வீழ்த்தி அரையிறுதிக்குள் சாய்னா நேவால் நுழைந்தார்.

இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் 23ஆம் தேதி தொடங்கியது. இதில் லீக் சுற்றுக்கள் முடிவடைந்து காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில். நேற்று (ஜனவரி 26) நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனைகளான சாய்னா நேவாலும், பி.வி.சிந்துவும் மோதினர்.

நேற்றைய போட்டிக்கு முன்புவரை சர்வதேசப் போட்டிகளில் இருவரும் இரண்டு முறை நேருக்கு நேர் மோதி உள்ளனர். அதில் இருவரும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளனர். எனவே, இந்தப் போட்டியில் வெற்றி பெற்று இரண்டு வெற்றிகளுடன் முன்னிலை பெறப் போவது யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

சமீபத்தில் தோல்விகளைச் சந்தித்து வந்த சாய்னா புள்ளிப்பட்டியலில் 12ஆவது இடத்துக்குப் பின்னுக்கு தள்ளப்பட்டிருந்தார். இந்த நிலையில் அவர் தரவரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ள பி.வி.சிந்துவை எதிர்கொண்டு வெற்றி காண்பாரா என்ற கேள்வியும் எழுந்தது. அதற்குப் பதில் தரும் விதத்தில் சிறப்பாக விளையாடிய சாய்னா, சிந்துவுக்கு வாய்ப்பே வழங்காமல் தொடர்ச்சியாக இரண்டு செட்களையும் 21-13, 21-19 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றி வெற்றி பெற்றார்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

சனி 27 ஜன 2018