மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 27 ஜன 2018

சுற்றுலாத்துறைக்குச் சலுகை அளிக்கக் கோரிக்கை!

சுற்றுலாத்துறைக்குச் சலுகை அளிக்கக் கோரிக்கை!

சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் வகையிலான நடவடிக்கையை வரும் பட்ஜெட்டில் மேற்கொள்ள வேண்டுமென்று சுற்றுலாத் தொழில்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கேரளாவைச் சேர்ந்த மேக் மை டிரிப் நிறுவனர் மற்றும் தலைவர் தீப் கல்ரா இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், "தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளைப் போல இந்தியாவிலும் சுற்றுலாத்துறைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலான சலுகைகளை அளிக்க வேண்டும். மேற்கண்ட நாடுகளில் குறைந்தபட்ச வரிவிகிதங்கள் விருந்தோம்பல் துறையின் வளர்ச்சிக்குப் பெரிதும் பங்காற்றுகின்றன. இந்தியாவில் சுற்றுலாத்துறைக்கான செலவுகள் அதிகமாக இருப்பதால் சுற்றுலாத் துறையின் வளர்ச்சியில் பெரிய முன்னேற்றம் காணப்படவில்லை. வரும் பட்ஜெட்டில் சுற்றுலாத் துறைக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். இந்தியாவின் உள்கட்டமைப்புத் துறையை மேம்படுத்தி தொழில்துறையை வளர்ச்சியடையச் செய்ய வேண்டும். உள்கட்டமைப்பு மேம்பாட்டில் தனியார் துறை முதலீட்டை அதிகரிக்க வேண்டும். வரும் பட்ஜெட்டில் இத்துறையை ஈர்க்கும் வகையிலான அறிவிப்பை வெளியிட வேண்டும்" என்றார்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

சனி 27 ஜன 2018