மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 27 ஜன 2018

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது!

கரூரில் சுவர் விளம்பரத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் சாலை மறியலில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்பட 47பேர் கைது செய்யப்பட்டனர்.

அதிமுகவிலிருந்து ஒதுக்கப்பட்ட பிறகு தினகரன் தனி அணியாகச் செயல்பட்டு வருகிறார். முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தினகரனுக்கு ஆதரவாக இருந்து வருகிறார். தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களில் இவரும் ஒருவர்.

எம்.ஜி.ஆரின் நூறாவது பிறந்தநாள் விழா அரசின் சார்பில் கொண்டாடப்படும் நிலையில், பல மாவட்டங்களில் தினகரன் அணியினர் தனியாக எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடிவருகின்றனர். அதன்படி கரூரில் விழா நடத்த மாவட்ட காவல் துறையிடமும், நகராட்சியிடமும் செந்தில் பாலாஜி அனுமதி கேட்டிருந்தார், ஆனால் அனுமதி கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அனுமதி கேட்டு மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் வரும் 27, 28,29 ஆகிய நாட்களில் ஏதாவது ஒரு நாளில் நூற்றாண்டு விழாவை நடத்த அனுமதியளித்தது.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

சனி 27 ஜன 2018