மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 27 ஜன 2018

துறைமுகத்துக்கு எதிர்ப்பு: மீனவ மக்கள் போராட்டம்!

துறைமுகத்துக்கு எதிர்ப்பு: மீனவ மக்கள் போராட்டம்!

கன்னியாகுமரியில் இன்று 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவ மக்கள் ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பன்னாட்டு சரக்குப் பெட்டக மாற்று முனையத் துறைமுகம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னியாகுமரியில் இன்று (ஜனவரி 27) 3 ஆயிரத்திறக்கும் மேற்பட்ட மீனவ மக்கள் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

27 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான இந்தத் துறைமுகத்தை முதலில் இனையம் பகுதில் அமைக்க திட்டமிடப்பட்ட நிலையில் அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த எதிர்ப்பையடுத்து கீழமணக்குடிக்கும், கோவளத்துக்கும் இடையே உள்ள ஒரு இடத்தில் அமைக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. அங்கு அமைத்தால் மீனவ மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கூறிக் கடந்த 12ஆம் தேதி கோவளத்தில் போராட்டம் நடைபெற்றது.

இந்நிலையில் கன்னியாகுமரியில் இன்று 3000 மீனவ மக்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்கள்.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

சனி 27 ஜன 2018