மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 27 ஜன 2018

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மரியாதை தர வேண்டும்!

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மரியாதை தர வேண்டும்!

யாராக இருந்தாலும் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு உரிய மரியாதை தர வேண்டும் என்று துணை முதல்வர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

ஹெச்.ராஜா தந்தையின் நூல் வெளியீட்டு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டபோது ஆளுநர் உள்பட அனைவரும் எழுந்து நின்றனர். காஞ்சி மடத்தின் இளைய மடாதிபதி விஜயேந்திரர் மட்டும் அமர்த்திருந்தார். ஆனால் நாட்டுப் பண் இசைக்கப்பட்டபோது எழுந்து நின்றார். இது தமிழ் அமைப்புகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. விஜயேந்திரருக்கு எதிராக பல்வேறு அமைப்புகளும் போராட்டம் நடத்தி வருகின்றனர். மதுரை, சென்னை உள்ளிட்ட இடங்களில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை தரமணியில் இன்று (ஜனவரி 27) நடைபெற்ற நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் பன்னீர்செல்வம், "யாராக இருந்தாலும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு உரிய மரியாதை தருவது ஒரு தனிமனிதனின் கடமை" என்று கூறினார்.

மேலும் அவர், "பேருந்து கட்டண உயர்வுக்கான காரணத்தை ஏற்கனவே அரசு தெளிவுபடுத்திவிட்டது. தொடர்ந்து டீசல் கட்டணமும் உயர்ந்துவிட்டது. கடந்த 7 ஆண்டுகளாக தமிழகத்தில் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்படவில்லை. அதனால்தான் தற்போது கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அண்டை மாநிலங்களை விட தமிழகத்தில் பேருந்துக் கட்டணம் குறைவுதான்" என்று கூறினார்.

பன்னீர்செல்வத்திடம் எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழாவுக்கு அவரது நண்பரான திமுக தலைவர் கருணாநிதிக்கு அழைப்பு விடுக்கப்படுமா என்ற கேள்விக்கு, பொறுத்திருந்து பாருங்கள் என பதிலளித்தார்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

6 நிமிட வாசிப்பு

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம ...

3 நிமிட வாசிப்பு

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்!

சனி 27 ஜன 2018